யாழில் ஒரே நேரத்தில் பலருடன் உறவு கொள்ளும் யுவதியின் கதை!!
மகளீர் வலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
யாழ்ப்பாணத்தில் குடும்ப வறுமை, தோல்வியடைந்த திருமண வாழ்க்கை காரணமாக வழிதவறிய யுவதியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மகளீர் அமைப்பொன்றின் கவனத்தயைீர்த்த இந்த விவகாரத்தையடுத்து, அந்தப் பெண் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு, அவருக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு திட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாணவிகளும், இளம் பெண்களும் வாழ்க்கையில் துரிதகதியில் எடுக்கும் முடிவுகள் எப்படியான அபாயங்களை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கைக்காக அந்த யுவுதியின் கதையை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.
சுமார் 5 வருடங்களின் முன்னர், வலி.வடக்கிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயின்று வந்த மாணவி அவர். அவரை இனி இந்த பகுதியில் மாதவியென்று குறிப்பிடுகின்றோம். 15 வயதான அவருக்கு ஊரில் உள்ள இளைஞர் ஒருவர் மீது ஒரு தலை காதல் ஏற்பட்டது.
ஆனால் அந்த இளைஞனுடன் அவரால் பேச முடியவில்லை. ஓரிரு மாதங்களின் பின்னர்தான் அறிந்தார். தனது வகுப்பில் பயிலும் சகமாணவியொருவரும், அந்த இளைஞனும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர் என்பதை.
அந்த மாணவியை தனிமையில் சந்தித்த மாதவி, அந்த இளைஞனுடனான காதல் உறவை கைவிடும்படியும், தான் அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவி அதை ஏற்கவில்லை. தாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளதாகவும், ஒரு தலை காதலுக்காக எல்லாம்தான் பிரிந்து செல்ல முடியாது என கறாராக கூறிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து, ஓரிரு வாரங்களில் சுழிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், வீதியில் மாதவியைப் பார்த்து சிரித்தார். தொடர்ந்தும் அந்த இளைஞர் தன்னை கவரும் முயற்சியில் ஈடுபட்டதை அவதானித்த மாதவிக்கும், அந்த இளைஞனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே, தான் காதலித்த இளைஞன் கிடைக்காத கோபத்தில் இருந்த மாதவி, ஓரிரு நாளிலேயே சுழிபுரம் இளைஞனின் காதலில் விழுந்தார்,
ஓரிரு வார காதல் அது.
தனது 15 வயது வயதில் மாதவி காதலனின் பேச்சை நம்பி, அவனுடன் ஓடிச் சென்றார்,
காதலனுக்கு 21 வயது. நிரந்தர தொழில்ல இல்லை. வறுமையான குடும்பப் பின்னணி. கிளிநொச்சியில் உள்ள தனது ஒறவினர் ஒருவரது வீட்டுக்கு மாதவியை அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். காதலன் கூலி, கட்டுமான வேலைகளுக்கு சென்றான்.
காதலனுடன் ஓடிச் சென்ற 10வது மாதத்தில் மாதவி குழந்தை பிரசவிக்க தயாரானார். அவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு காதலன் அழைத்துச் சென்றான்.
மாதவியை பிரசவ விடுதியில் அனுமதித்துவிட்டு, வெளியே வந்த காதலன், அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்ட யுவதியொருவரின் அழகில் மயங்கினான். அவரிடம் பேச்சு கொடுத்தான். இருவரும் அங்கு பேசிக் கொண்டிரு்தனர். அதன் பின்னர், அவன் மாதவியைப் பார்க்க வரவேயில்லை.
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட மாதவி, கணவன் வருவான் என காத்திருந்தார். அவன் வரவேயில்லை. வைத்தியசாலைக்குள் நிர்க்கதியாகிய மாதவி, ஆண் குழநதையை பிரசவித்தார்.
போக்கிடம் இல்லாமலும்,குழந்தை பிரசவத்தாலும் பராமரிப்ப நிலையமொன்றில் சிறிது காலம் குழந்தையுடன் மாதவி தங்கியிருந்தாள்.
பின்னர், மாதவியின் பெற்றோர் அங்கு சென்று, மகளையும், குழந்தையையும் பொறுப்பேற்றனர். அவர்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழைப் பெற்றோர். மாதவிக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். குடிசை வீடொன்றிலேயே வசிக்கிறார்கள். மாதவியின் கடைசி தங்கைக்கும், மாதவியின் மகளுக்குமிடையில் 7 வயது வித்தியாசம்.
ஓரிரு வருடங்களின் பின்னர், மற்றொரு இளைஞனுடன் மாதவிக்கு அறிமுகம் ஏற்பட்டு, காதலாகியது. அதுவும் சில வார காதல்தான். மாதவிக்கு சிறிய குழந்தையொான்றுள்ளதை அறிந்தும், அவளைக் காதலிப்பதாக அவன் கூறினான். மாதவி அதை நம்பினாள்.
மாதவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியொன்றில் உள்ள விடுதிக்கு சென்றான். அங்கு மதுபானம் அருந்தி, மாதவியையும் அருந்த வைத்து பாலியல் உறவு கொண்டான். தனது இரண்டு நண்பர்களுக்கும் மாதவியை விருந்தாக்கினான்.
மாதவிக்கு இது அடுத்த பேரதிர்ச்சி.
அந்த காதலனும் தொடர்பை துண்டித்தான்.
வாழ்க்கையின் கருப்பு பங்கங்களை மட்டுமே சந்தித்த மாதவி, வாழ்க்கையை ஒரு கருப்பு அத்தியாயமாக உணர்ந்தாரோா என்னவோ…. புதியதொரு வழக்கத்திற்கு அடிமையானார்.
ஆம்… அவர் பல ஆண்களுடன் உறவு கொள்ள ஆரம்பித்தார், அவர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார் என ஒரு பகுதியினர் குறிப்பிட்டனர். தனது உடல் தோவைக்காக உறவு கொள்கிறார் என சிலர் குறிப்பிட்டனர்.
மிகச்சில காலத்தில், அவர் குழு பாலுறவை விரும்பும் பெண்ணாகவும் மாறி விட்டார்.
உள்ளூரில் சிலர், இது பற்றி பெற்றோரையும் எச்சரித்தனர். அவர்களும் அரசல்புரசலாக தகவலறிந்திருந்தாலும், மாதவியை கட்டுப்படுத்த முடியாமலிருந்தார்கள். வாழ்கையின் கருப்பு பக்கங்களையே பார்த்த விரக்தியினாலும் அவர் அப்படி செயற்பட்டிருக்கலாம்.
ஏனெனில் அவர் பற்றிய தகவலறிந்த மகளீர் வலையமைப்பொன்று அவரை அணுகிய போது, அவர் சாதகமான மனநிலையில் அவர்களுடன் தொடர்பு கொண்டு, புதிய வாழ்ககையொன்றுக்காக ஆர்வமாயிருந்தார்.
தற்போது, ஒரு பாதுகாப்பான வலையமைப்பின் பொறுப்பில் உள்ள மாதவி, இந்த காலத்தை பற்றி பேச விரும்பவில்லை. பேசாமல் கடந்து செல்ல விரும்பினார். தற்போது உளவள ஆலோசனையும் பெறும் மாதவி, தொழில் வாய்ப்பொன்றிற்காக காத்திருக்கிறார்,
மாணவிகள் கல்வி சுற்று முடிந்து, வாழ்க்கையின் சூட்சுமங்களை அறிந்த கொள்வதற்கு முன்னதாக, திருமண உறவை ஆரம்பிப்பதில் உள்ள அபாயங்களை மனம் கொள்வது அவசியம் என்ற உண்மையை உணர்த்துகின்தல்லவா மாதவியின் கதை!!