யாழ் வேம்படி மகளீர் கல்லுாரி மாணவி வகுப்பில் செய்த திருவிளையாடல்!!
யாழ் வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மாணவிகள் பயன்படுத்துவதற்கு, மலசலகூடம் கூட ஒழுங்கான முறையில் இல்லை என குற்றச்சாட்டுக்கள் வந்திருந்தன. இந் நிலையில், இன்று காலை குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுக்கும் குறைவான மாணவி ஒருவர், தனது பாடசாலை புத்தகப் பையினுள் சார்ச்சர் மின் விசிறி ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.
வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது குறித்த மாணவி மின்விசிறியை போட்டுக் கொண்டு வகுப்பில் இருந்துள்ளார்.
இதனை அவதானித்த ஆசிரியை அதிர்ச்சியடைந்து குறித்த மாணவியை கடுமையாக எச்சரித்த பின் அதிபரிடம் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவி, யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவரின் மகள் என அறிந்த அதிபர், மாணவியை எச்சரித்த பின்னர் மீண்டும் வகுப்பில் அனுமதித்துள்ளார்.
கடும் வெப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் வேம்படி மகளீர் கல்லுாரியில் மின் விசிறிகள் இல்லாத வகுப்புகள் உள்ளமை மாணவர்களின் உடல், உள செயற்பாடுகளுக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.