விக்கட் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கொக்குவில் சிறுவன்!
மட்டக்களப்பு – நாராயணன் ஆனந்ததேவன் தர்சானந் என்ற 14 வயது மாணவனை நவம்பர் 16ஆம் திகதி கோயில் விளக்கு மற்றும் மணியை திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 17ஆம் தேதி மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்குள்ள சிறுவர் மறுவாழ்வு முகாமில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நவம்பர் 29 ஆம் தேதி தர்சானந் இறந்ததாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட மரண விசாரணையில் தர்சானந்தின் உடலில் காயங்கள் மற்றும் வீக்கங்கள் இருப்பது தெரியவந்தது.நீதிமன்ற மருத்துவரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது ஏன் என குழந்தையின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்சானந் பிடிவாதம் செய்வதாக கூறி, சிறுவர்சீர்திருத்த முகாமின் பெண் கண்காணிப்பாளர் சிறுவனை விக்கட் பொல்லால் தாக்குதல் நடாத்தியுள்ளாகியுள்ளார், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இறந்த தர்சானந்தின் காலில் இரண்டு அங்குல ஆழமான காயம் இருந்ததாகவும் அவரது தந்தை கூறினார்.
இதேவேளை கல்முனையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 14 வயதான சிறுவன், விக்கெட் கம்புகள் மற்றும் தும்புத்தடியால் தாக்கி, படுகொலைச் செய்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் காப்பாளருக்கு எவ்விதமான தொழில் தகுதியும் இல்லை என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெண் காப்பாளர், வீதியில் செல்லும் ஒருவரா? என தேடிப்பார்த்த போது, அவர் எந்தவொரு பரீட்சையிலும் சித்தியடையாதவர் என்றும் தொழில் தகுதி இல்லாதவர் என்றும் அவர் தெரிவித்தார்.நாட்டில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு மிகவிரையில், பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.