பிரான்சிலிருந்து 8 லட்சம் யூரோ சீட்டுக்காசுடன் இலங்கைக்கு தப்பிய சுரேன்!

பிரான்சிலிருந்து 8 லட்சம் யூரோ சீட்டுக்காசுடன் இலங்கைக்கு தப்பிய சுரேன்!

பிரான்ஸ் தலைநகர் பரீஸ் பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் 8 லட்சம் யூரோக்களுடன் சகாயராஜா சுரேன் எனும் 47 வயதான குடும்பஸ்தர் இலங்கைக்கு தப்பி ஓடியுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த நபர் பிரான்சின் பல பகுதிகளிலும் வீடுகள், காணிகளை தமிழர்களுக்கு வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். அத்துடன் தமிழர்களிடையே சீட்டு முதலாளியாகவும் இருந்துள்ளார்.

இந் நிலையில் கிட்டத்தட்ட என்பதுக்கும் அதிகமான தமிழர்களின் சீட்டுப் பணத்துடன் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது சுரேன் இலங்கையில் முல்லைத்தீவுப்பகுதியில் நடமாடிவருவதாகவும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

சுரேனுக்கு திருமணமானவர் என்பதுடன் மனைவி பிள்ளைகளுடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார்.

தற்போது பிரான்சில் உள்ள சுரேனின் மனைவியிடம் சீட்டுப்பிடித்தவர்கள் சென்று பணத்தைக் கேட்ட போது சுரேனும் தானும் பிரிந்து பல நாட்கள் ஆகின்றதாகவும் தான் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் மனைவி அங்கு செல்பவர்களிடம் கூறி வருவதாக தெரியவருகின்றது.