மயிலங்காட்டில் மதமாற்றிகள் விரட்டியடிப்பு! சிவ சேனை அதிரடி
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் சிவசேனை
மயிலங்காட்டில் மதமாற்றிகள் விரட்டினோம்.
யாழ்ப்பாணம் மாவட்டம்
உடுவில் பிரதேச செயலர் பிரிவு
யா/209 மயிலங்காடு நிலதாரிப்பிரிவு
அங்கே அருள் மிகு சிவன் கோயில்
அருகே ஸ்ரீ முருகன் வித்தியாசாலை
வித்தியாசாலையின் முதல்வர் சைவப் புலவர் பரமேசுவரன்.
மதமாற்ற சபை முதல்வரை அணுகுகிறது
விளையாட்டு திடலில் மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் 17.3, 18.3, 19.3.2023 நாள்களில் நடத்த உரிமம் பெறுகிறது.
முதல்வர் சைவப் புலவர் பரமேசுவரன்
கிறித்துவ மதமாற்ற சபை, சைவப் பாடசாலைக்குள் மதமாற்றும் முயற்சிக்கான கூட்டம் நடத்த உரிமம் கொடுத்துள்ளார்.
சிவ சேனைக்குச் செய்தி சொல்கிறார்கள் சிவசேனைத் தொண்டர்கள் செல்கிறார்கள் வித்தியாசாலையைச் சுற்றிச் சுவரொட்டி ஒட்டுகிறார்கள். படங்கள் பார்க்க.
சிவன் கோயிலாருடன் சுன்னாகம் காவல் நிலையத்துக்குச் சிவ சேனையர் செல்கிறார்கள் முறையிடுகிறார்கள்
போதகரை அழைத்த காவல் நிலையத்தினர் கூட்டத்தைத் தடை செய்துள்ளார்கள்.