கனடாவில் தமிழ் போட்டோகிறாப்பரின் காதல் லீலைகள்!

கனடாவில் தொழில்முறை படப்பிடிப்பாளர் என பெயரெடுத்து ஈழத்தமிழர்களின் பெருமளவான நிகழ்வுகளுக்கு சென்று புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கும் 48 வயதான யாழ் வடமராட்சியைச் சேர்ந்த ஒருவரின் காதல் லீலைகளால் பெரும் கொதிப்பில் உள்ளார்கள் அங்கு வாழும் பல தமிழ் குடும்பஸ்தர்கள்.
திருமணம் முடித்து மனைவி, 3 பிள்ளைகளுடன் வாழும் குறித்த போட்டோக்கிறாப்பர் பல தமிழ்க் குடும்பப் பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் உறவு கொண்டு வருவதாகவும் இதனால் சில குடும்பப் பெண்கள் தமது கணவன்மார்களை விவாகரத்து செய்துள்ளதாகவும் கனேடிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சில குடும்பஸ்தர்கள் தெவித்துள்ளார்கள்.
கோவில் திருவிழாக்கள் மற்றும் பொதுவான தமிழ் நிகழ்வுகளுக்குச் செல்லும் குறித்த படப்பிடிப்பாளர் அங்கு வரும் குடும்பப் பெண்களை அழகான முறையில் அவர்களுக்குத் தெரியாது புகைப்படம் எடுத்து அதன் பின்னர் அவர்களுக்கு அந்த புகைப்படங்களை அனுப்புவதாக கூறி அவர்களின் வட்சப் இலக்கத்தை வாங்கி அப் பெண்களுடன் தொடர்பு கொண்டு தனது லீலைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்த வருட தொடக்கத்தில் மகளின் சாமத்தியசடங்கிற்காக குறித்த படப்பிடிப்பாளரை அழைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியை தற்போது பிரிந்து வாழ்க்கை நடாத்துகின்றார்.
சாமத்தியவீட்டின் பின்னர் தனது மனைவி வீட்டில் நிற்கும் போது குறித்த படப்பிடிப்பாளர் மனைவியை சந்தித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இதனை இரகசிய கமராக்கள் மூலம் அவதானித்து வந்த கணவன் மனைவியை கையும் மெய்யுமாக பிடித்து தாக்கியதாகவும் இதன் காரணமாக மனைவி பொலிசாரிடம் முறையிட்டு கணவர் சிறைக்கு சென்று திரும்பியதாகவும் தெரியவருகின்றது.
இதன் பின்னர் தனது 39 வயதான மனைவியை அணுக முடியாதவாறு பொலிசார் கணவனுக்கு தடை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரியவருகின்றது,
இதனால் கோபமடைந்த கணவனின் நண்பர்கள் மற்றும் படப்பிடிப்பாளரால் பாதிக்கப்பட்ட சில குடும்பஸ்தர்கள் குறித்த படப்பிடிப்பாளரை பழையமாணவர்கள் ஒன்று கூடல் என கூறி அழைத்து நையப்புடைத்துள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனத் தெரியவருகின்றது.
குறித்த படப்பிடிப்பாளர் மற்றும் அவருடன் தொடர்புபட்டுள்ள சில குடும்பப் பெண்களின் புகைப்படங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் செய்தி இணையத்தளங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.