யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடைப்படையில் இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிட் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இளைஞனிடம் இருந்து 20 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
இளைஞனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.