யாழில்16 வயது மாணவி மதுமிதா மரணம்!
திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
மாணவிக்கு கடந்த வாரம் திடீர் திடீரென காய்ச்சல் வந்தமையால் கடந்த 07ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறுநாள் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
மாணவியின் மரணத்திற்கு காரணம் தெரியாத நிலையில் மாணவியின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.