நீயும் துரோகிதான்
விடுதலைப்புலிகளின் கொள்கைகளை எந்தவித மாற்றமும் இன்றி கடைப்பிடித்து துாய அரசியல் நடாத்திவருவதாக கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றார்கள்.
இவ்வாறு கூறி அரசியல்நடாத்தி வரும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரின் கேவலமான செயற்பாடு கொடிகாமத்தில் நடந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகளும் கருத்துக்களும் வெளியாகியுள்ளன.
யுத்தத்தில் இறந்த போராளிகளுக்காக புலிகளால் நினைவுகூரப்படும் மாவீரர் வாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந் நிலையில் கொடிகாமத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ்த்தேசிய முன்னணியினரல்லாத ஒரு கட்சியினர் துப்பரவு செய்ததுடன் கொடிகளையும் கட்டியிருந்தார்கள்.
இதனை அறிந்து அங்கு விரைந்து சென்ற சைக்கிள் கட்சி உறுப்பினர்கள துப்பரவு செய்து கொடிகட்டிய மற்றைய கட்சி உறுப்பினரை மிகக் கேவலமாக திட்டித்தீர்த்துள்ளார்கள். குறித்த காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அன்று இரவே அந்த கட்சியினர் கட்டிய தமிழ்த்தேசியக் கொடிகளும் அறுத்து எறியப்பட்டுள்ளது.
அதே வேளை அங்கு கஜேந்திரகுமார் அணியினர் கட்டிய கொடிகள் அப்படி காணப்பட்டதாக சமூகவலைத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாவீரர் துயிலுமில்லத்தி்ன் மிக அருகில் படையினரின் இராணுவ முகாம் உள்ளது. மாவீரர் துயிலுமில்லத்தில் கட்டப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்தவர்கள் யார் என்பது படையினருக்கு நன்கு தெரிந்திருக்கும். அத்துடன் அவர்களிடம் வீடியோ ஆதாரங்களும் இருக்கலாம்.
கொடிகள் அறுத்து எறியப்பட்டமை தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியினர்தான் அந்தக் கொடிகளை அறுத்து எறிந்தார்கள் என்று ஆதாரபூர்வமாகக நிரூபிக்கப்பட்டால் கஜேந்திரகுமார் அணியை கோவணத்துடன் துரத்தி அடிக்கும் நிலைக்கு மக்கள் மாறுவார்கள்.
இவ்வாறு கஜேந்திரகுமார் அணியினர் கொடிகளை அறுத்து எறிந்து அட்டாகசம் செய்தார்கள் என நிரூபிக்கப்பட்டால் , புலித்தலைவர் பிரபாகரன் குறித்த அணியினரின் முன்னால் வந்து ”நீங்கள் செய்வது பிழையான செயல்” என கூறியிருந்தால் புலித்தலைவரையே துரோகி என கூறி அடிபோட்டு தாக்கும் அளவுக்கு கஜேந்திரகுமார் அணியினர் இருப்பார்கள் என்பது உறுதி.