கம்முனு இருந்துருவோம்.. அமைதி காக்கும் அண்ணன், தம்பி.. அதுதான் காரணமா?
பிரபல வாரிசு நடிகர்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரச்சனையில் தலையிடாமல் அமைதி காத்து வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நிலையில், யாருக்கு சாதகமாக இந்த விவகாரத்தில் அந்த பிரைட் நடிகர் பேசுவது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பல வருடங்களாக அந்த தயாரிப்பாளரால் வலியை அனுபவித்து வந்தது இயக்குநர் தான் என்றும் ஆனால், தனக்கு பெரிதாக நியாயம் கிடைக்காத நிலையில், அமைதியாக இருந்து விடுவோம் என அந்த பிரச்சனையை இத்தனை ஆண்டு காலம் மறந்து இருந்து வந்தாராம்.
ஆனால், சமீபத்தில், தேவையில்லாமல் குப்பையை அந்த தயாரிப்பாளர் கிளறியது தான் இத்தனை பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.
தயாரிப்பாளரின் புதிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், படத்தை புரமோட் செய்யாமல் பகையை புரமோட் செய்து ஊதி பெரிதாக்கி விட்டார் அந்த தயாரிப்பாளர் எனக் கூறுகின்றனர். மேலும், அவர் இஷ்டத்துக்கு பேச பேச ஏகப்பட்ட கிரைம் ரேட் கூடிக் கொண்டே போகிறது என்றும் திரையுலகினர் பாதிக்கப்பட்ட இயக்குநர் பக்கம் அதிகளவு தற்போது அதிகரித்து இருப்பது அந்த அண்ணன், தம்பி நடிகர்களுக்குத் தான் ஆபத்து எனக் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஓடிடி பிரச்சனையில் பிரைட் நடிகர் பலமான அடியை சந்தித்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் மீளவே முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், அடுத்த படத்தை மலை போல நம்பி இருக்கும் நேரத்தில் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தால் தனக்கு தான் சிக்கலாகும் என்பதால் சைலன்ட் மோடில் பிரைட் நடிகர் இருப்பதாக கூறுகின்றனர்.
அனைத்து பிரச்சனைக்கும் ஆணிவேராக இருந்த பிரதர் நடிகரும் தயாரிப்பாளரை நைஸாக கழட்டி விட்டு சமீபத்தில் தான் பெரிய அடி வாங்கி இருக்கேன். மீண்டும் சிக்கலில் கோர்த்து விடாமல் நீயே பேசி விஷயத்தை சீக்கிரம் முடி என சொல்லி எஸ்கேப் ஆகி விட்டாராம்.
கோல்டு படத்துக்கு சிக்கல்: ஆனால், அந்த தயாரிப்பாளர் ஒன்றும் லேசு பட்டவர் இல்லையாம். இவர்கள் இருவரும் கை விரித்தாலும் இந்த விவகாரத்தை விட மாட்டேன் என விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், வி நடிகரின் கோல்டு படம் பெரும் சிக்கலை சந்திக்கும் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.