நேர்முகப்பரீட்சைக்கு சென்ற 28 வயது பட்டாதாரி மர்ம மரணம்!! எதற்காக?
கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யசரா பதுளையில் வசிக்கும் இளம் பெண்ணாகும். அவர் இரண்டு பெண்களைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் என தெரியவந்துள்ளது.இவரது தாயார் சந்தியா பதுளை மாநகர சபையில் பணிபுரிகிறார். இவரது தந்தை காமினி குணசேகர. அவரது மற்றுமொரு சகோதரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற யசரா, 2017 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.பல்கலைக் கழகக் கல்வியை முடித்து இரண்டு மாதங்களேயான நிலையில் உயிரிழந்துள்ளார்.படிக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்திற்கமைய, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நேர்முகத் தேர்வின் ஆரம்ப பகுதி முடிந்துவிட்டாலும், இன்னொரு கட்ட நேர்முக தேர்வ இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த இரண்டு மூன்று நாட்களும் தன் பல்கலைகழக நண்பர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றுள்ளார்.
அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, இரவு 10.30 மணியளவில் அவரது நண்பர்கள் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் கடந்த 2ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியிடாத நிலையில் உடற் பாகங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.