தனியார் பள்ளி பேருந்து விபத்து- 25 மாணவர்கள் காயம்
கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் பேருந்து 40 மாணவர்களுடன் ஏரவார் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பொற்படாக்குறிச்சி ஏரிக்கரை அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.