83 வயது கிழவியை எதற்காக கொன்றான் பாடசாலை மாணவன்!

83 வயது கிழவியை எதற்காக கொன்றான் பாடசாலை மாணவன்!

83 வயதான மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, தொண்டு பணிகளுக்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்த 18 வயதான உடற் கட்டழகனான மாணவன் ஒருவனை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடற் கட்டழகிற்காக விற்றமின் மாத்திரைகள் வாங்குவதற்காக பணத்தை கொள்ளையடித்ததாக கைதான மாணவன் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 83 வயதுடைய திருமணமாகாத திலகா நளினி பெர்னாண்டோ என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்தேக நபர் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற இங்கிலாந்து பிரஜை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​மூதாட்டியை தாக்க பயன்படுத்திய கத்தி, அவரிடம் இருந்து திருடப்பட்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, கொலையின் போது சந்தேக நபர் அணிந்திருந்த டீ-சேர்ட் மற்றும் கால்சட்டை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மிஸ்டர் ஸ்ரீலங்கா ஜூனியர் உடற்கட்டமைப்பு போட்டியில் பங்குபற்றுவதற்கு தயாராகியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்த கொலைச்சம்பவம் நடந்தது. மூதாட்டியின் தலையில் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.