கிளிநொச்சியில் கொலை சிறை இருந்த பிரகாஸ் பிணையில் வெளியே வந்த பின் சடலமாக மீட்பு!!
கொலை வழக்கு ஒன்றில், கைதாகி சுமார் 10 மாதங்களின் பின்னர் பிணையில் வந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த ஜோன் பிரகாஸ் (வயது 22) என்பவரே கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கொலை சம்பத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து இருந்தது.
இந்நிலையிலையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உயிரிழப்பு கொலையா ? அல்லது விபத்தா ? என்பது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.