கனடா Torontoவில் 36 கோடி பெறுமதியான வாகனத் திருட்டில் 29 வயதான தமிழ்பெண் உட்பட 4 தமிழர்கள் கைது!

கனடா Torontoவில் 36 கோடி பெறுமதியான வாகனத் திருட்டில் 29 வயதான தமிழ்பெண் உட்பட 4 தமிழர்கள் கைது!

கனடா ரொறோன்ரோ பொலிசாரினால் 4 தமிழர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் 30 கோடி ரூபா இலங்கை மதிப்புள்ள 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்ளை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள உள்ள வாகன பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ServiceOntario எனும் கனேடிய அரசு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுடன் இரகசிய தொடர்பில் இருந்து இவ்வாறு வாகனங்களை திருடியதாக கனேடியப் பொலிசார் சந்தேகிக்கின்றார்கள்.

குறித்த தமிழர்கள் மீது 70க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வாகனங்களைத் திருடி அவற்றின் வானகப் பதிவு இலக்கங்களை மாற்றி இவர்கள் பலருக்கு வாகனங்களை விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனேடியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

டொராண்டோவைச் சேர்ந்த 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 25 வயதான கோபி யோகராஜா மற்றும் 29 வயதான மிலோஷா ஆரியரத்தினம்,32 வயதான கஜன் யோகநாயகம் ஆகியோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.