யாழில் நெஞ்சுவலியால் துடிதுடித்து பலியான வங்கி ஊழியர்

யாழில் நெஞ்சுவலியால் துடிதுடித்து பலியான வங்கி ஊழியர்

கொடிகாமத்தில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி உணவகம் ஒன்றிற்குள் சென்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியை சேர்ந்த பாலசுந்தரலிங்கம் மதனகுமார் (38) என்பவரே உயிரிழந்தார்.

அவர் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் இலங்கை வங்கி கிளையில் பணிபுரிகிறார். இன்று, பணி முடிந்து வீடு திரும்பிய போது, கொடிகாமம் பகுதியில் இயலாமல் உள்ளதால் உணவருந்தி விட்டு வருவதாக உணவகம் ஒன்றிற்குள் சென்றவர், அங்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார்.