யாழில் குடும்பமாக பிச்சை எடுத்து நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் உழைத்து கொழும்பில் வீடு கட்டும் கில்லாடி பிடிபட்டது எப்படி?

யாழில் குடும்பமாக பிச்சை எடுத்து நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் உழைத்து கொழும்பில் வீடு கட்டும் கில்லாடி பிடிபட்டது எப்படி?

பாத்திரமறிஞ்சு பிச்சையிடு எண்டு முந்தின ஆக்கள் சொல்லுறது இப்பவும் பொருத்தமாத்தான் இருக்குது. நாலைஞ்சு நாளுக்கு முதல் யாழ்ப்பாணத்தில மூண்டு சந்தியளில ஒவ்வொரு சின்னப்பிள்ளையள் நிண்டுகொண்டு போறவாற ஆக்களிட்ட பிச்சை கேட்டிருக்கினம்.

பத்தியெரியிற இந்த வெயிலுக்குள்ள பச்சைப்பிள்ளையள் பிச்சை கேட்டால் எல்லாருக்கும் இரக்கம் வரும்தானே. அதால அந்தச் சந்தியால போறவாறவையெல்லாம் பார்த்துப் பாராமல் அந்தப் பிள்ளையளுக்குக் காசைப் போட்டிட்டு போயிருக்கினம்.

ஆனால் ஆரோ ஒரு புண்ணியவான் ‘சின்னப்பிள்ளையளை வைச்சு பிச்சை எடுக்கினம்’ எண்டு பொலிஸுக்குப் போட்டுக்குடுக்க, அந்தப்பிள்ளையளை அப்பிடியே அள்ளிக்கொண்டுபோய் விசாரிச்சிருக்கு பொலிஸ்.
அந்தப்பிள்ளையள் தனியவரேலை.

அவையின்ர தாய் தகப்பனோட தான் வந்திருக்கினம். அவை எங்க நிக்கினம் எண்டு பொலிஸ் தேடினால், அவையும் வேற சந்தியளில் பிச்சை எடுத்துக் கொண்டு நிண்டிருக்கினம். அவையையும் அலேக்கா தூக்கிக்கொண்டு வந்து பொலிஸ் விசாரிச்சிருக்கு.

‘இப்பிடி சின்னப்பிள்ளையளை வைச்சு பிச்சை எடுக்கிறது குற்றம். ஏன் அப்பிடி செய்தனீங்கள்? எண்டு பொலிஸ் உறுக்கி கேக்க, அவை சொன்ன பதிலைக் கேட்டு பொலிஸுக்கு அழுகிறதா. சிரிக்கிறதா எண்டு தெரியாமல் போட்டுதாம்.

ஐயா! நாங்கள் வத்தளையில இருக்கிறம். அங்க சொந்தமா வீடு கட்டிக்கொண்டிருக்கிறம். அதுக்குத் தான் இப்பிடிக் குடும்பத்தோட வந்து பிச்சை எடுக்கிறம்.

எடுத்து எப்பிடி வீடு கட்டமுடியும்? ஆரைப் பேய்க்காட்ட பாக்கிறியள்? எண்டு இன்னும் பொலிஸ்காரர் அதட்டியிருக்கினம்.

சத்தியமா உண்மை. இஞ்ச எங்கட செலவுகள் எல்லாம் விட்டு ஒருநாளைக்கு முப்பதாயிரம் ரூபாவுக்கு கிட்டத் தேறும். பத்துப் பதினைஞ்சு நாள் இஞ்ச பிச்சை எடுத்திட்டு, அந்தக் காசைக் கொண்டு போய் வீடுகட்டுற வேலையைப் பாப்பம்.

பிறகு காசு முடிய இஞ்ச வருவம். யாழ்ப்பாணத்தில மட்டுமில்ல. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு இடம்போவம். ஆக்கள்கூட நடமாடுற இடங்களில் நிண்டாத்தான் காசு நிறையக் கிடைக்கும் எண்டு அவை சொன்ன தகவலை வைச்சுக் கொண்டு, வத்தளைப் பொலிஸுக்கும் அடிச்சுக் கேட்டால், இவை சொன்ன இடத்தில அப்பிடி ஒரு வீடு கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது உண்மைதான் எண்டு உறுதியாகிட்டுதாம்.

இஞ்ச அரசாங்கவேலையுள்ளவையே ‘லோன்’ எடுத்தும் வீடு கட்ட ஏலாமல் முக்கித்தக்கேக்க எங்கேயோ இருந்து இஞ்ச வந்து பிச்சை எடுத்த காசில கொழும்பில வீடு கட்டுகினம் எண்டாப் பாருங்கோவன். அதைவிட இந்தப் பிச்சையெடுக்க வந்த குடும்பம் எங்க தங்கியிருந்தவை எண்டு பொலிஸ் நோண்டினா அதிலையும் பெரும் அதிர்ச்சியாம்.

யாழ்ப்பாணத்தில உள்ள பெரிய ஹொட்டல் ஒண்டில தான் அவையள் ரூம் எடுத்து நிண்டிருக்கினமாம். இந்தக் ஹொட்டல் செலவு போகத்தான் அவைக்கு ஒவ்வொருநாளும் முப்பதாயிரம் கையில மிஞ்சியிருக் கெண்டால், கிட்டத்தட்ட 50 ஆயிரம் மட்டில பிச்சை எடுத்திருக்கினம். ஹொட்டலிலரும் போட்டு நிண்டு பிச்சை எடுக்கிற அளவுக்கு இலங்கையின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் முன்னேறியிருக்கு கண்டியளோ.