சாதி மாறி கலியாணம்! கர்ப்பிணி பெண் கடத்தல்

சாதி மாறி கலியாணம்! கர்ப்பிணி பெண் கடத்தல்

யாழ் ஊர்காவற்துறையில் தனது அயலில் வசித்து வந்த மைக்கல்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்து வந்த தட்சாயினி எனும் 25 வயதான கர்ப்பிணிப் பெண் கடந்த செவ்வாய் இரவு அவளது உறவினர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்தக் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தட்சாயினி வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர் எனவும் தட்சாயினியின் கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.இருவரும் காதலித்து வீட்டை விட்டு ஓடிச் சென்று மன்னார் பகுதியில் வசித்து வந்துள்ளார்கள்.

இந் நிலையில் இவர்களை தங்களுடன் வந்து வாழும்படி கூறி தட்சாயினியின் உறவுகள் அழைத்துள்ளார்கள். அதனை நம்பி வந்த போதே தட்சாயினி அவளது உறவினர்களால் கடத்தப்பட்டாள்.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்ட போது பொலிசார் தட்சாயினியின் இரு சகோதரர்களை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளார்கள். குறித்த இரு சகோதரர்களும் உயர்கல்வியைக் கற்று வரும் காரணத்தாலேயே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளார்கள்.

மைக்கல்ராஜின் பிள்ளை எனது மகளின் வயிற்றில் வளரவிடமாட்டேன் என தந்தை பகீரதன் பலரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தட்சாயினியை கட்டாயப்படுத்தி தந்தை கருக்கலைப்பு மேற்கொண்டிருக்கலாம் என கடும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் ஊர்காவற்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பா பகீரதன் தாய் கிருஸ்ணவேணி மற்றும் சகோதரர்களுடன் தட்சாயிணி

அப்பா பகீரதன் தாய் கிருஸ்ணவேணி மற்றும் சகோதரர்களுடன் தட்சாயிணி

தட்சாயிணியும் மைக்கல்ராஜம் தம்பதிகளாக

தட்சாயிணியும் மைக்கல்ராஜம் தம்பதிகளாக