46 வயது கனடா குடும்பப் பெண் 30 வயது ஐயருடன் காதல்! ஐயர் மனைவி தற்கொலை முயற்சி!
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 46 வயதாக குடும்ப பெண் தனது கணவனுடன் காதல் தொடர்பைப் பேணுவதாக சந்தேகித்து பூசகர் ஒருவரின் மனைவி தற்கொலைக்கு முயன்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ் வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றில் பிரதம பூசகராக இருப்பவரின் மனைவியே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவராவார். கனடாவுக்கு செல்வதற்காக பூசகர் பாஸ்போட் பெற வவுனியாவுக்கு அலைந்து திரிந்துள்ளார். கனடாவில் உறவுகள் இல்லாத நிலையில் அங்கு எப்படி செல்லமுடியும் என பூசகரின் உறவுகள் மற்றும் மனைவியும் கேட்ட போதும் பூசகர் அதற்கு விளக்கம் இருந்துள்ளார். அவருக்கு கடந்த மாதம் பாஸ்போட் கிடைத்துள்ளது.
பூசகரின் கோவில் திருவிழா ஒன்றின் உபயகாரரான கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இப் பெண் கனடாவில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருபவர். 20 வயதில் பெண் பிள்ளை ஒன்றும் குறித்த பெண்ணுக்கு இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் மேமாதம் தனது கோவில் திருவிழாவுக்கு குறித்த பெண் வந்து செல்பவர்.
கோவிலுக்கு சற்று தொலைவிலேயே குறித்த பெண்ணின் சொந்தவீடும் உள்ளது.இந்த வருட கோவில் திருவிழாவுக்கும் குறித்த பெண் வந்து சென்றுள்ளார். அப்போது கோவில் ஐயருக்கு பல லட்சம் பெறுமதியான ஐபோன் மற்றும் லெப்டொப் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஐயரின் மனைவி உட்பட்டவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனாலும் இரவு வேளைகளில் ஐயர் நித்திரை கொள்ளாது தொலைபேசியில் உரையாடுவது தொடர்பாக மனைவி பலதடவைகள் சந்தேகம் கொண்டு சண்டை பிடித்துள்ளார்.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கனடா செல்வதற்கான விசா விண்ணப்பபடிவங்களை ஐயர் முகவர் ஒருவர் மூலம் நிரப்பி ஒன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். அதன் பிரதிகளை தனது அலுமாரியில் வைத்துள்ளார். அதனை ஆராய்ந்து பார்த்த மனைவி ஐயரை கனடாவுக்கு எடுப்பதற்கான ஸ்பொன்சரை தமது கோயில் திருவிழா ஒன்றின் உபயகாரரான அந்தப் பெண்ணே செய்துள்ளதை அறிந்து அதிர்ந்துள்ளார்.
இதன் பின்னர் ஐயருக்கும் மனைவிக்கும் தொடர்ந்து சண்டை நடந்துள்ளது. கோவிலுக்குள் பக்கதர்கள் வரும் போதும் பக்தர்களுக்கு ஐயரின் மனைவி அந்த பெண் தொடர்பாக தெரிவித்து முறையிட்ட போது ஐயர் மனைவியை கோவிலுக்குள் வைத்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னணியிலேயே ஐயரின் மனைவி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றுவருவதாக கோயில் பக்தர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.