யாழ் பிரபல பாடசாலை முன் பூக்கன்று விற்பவர் போதைப் பொருளுடன் கைது

யாழ் பிரபல பாடசாலை முன் பூக்கன்று விற்பவர் போதைப் பொருளுடன் கைது

வடமராட்சி, நெல்லியடியில் பிரபல பாடசாலையின் முன்புறமாக, பூங்கன்றுகள் விற்பனை செய்யுமிடத்தில் நூதனமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்தவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிசாரால் நேற்று (18) போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

நாடளாவியரீதியில் போதைப்பொருள் வலையமைப்புக்கு எதிராக பொலிசார் ஆரம்பித்துள்ள விசேட நடவடிக்கையின் ஒரு அங்கமாக, நெல்லியடி பொலிசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்புறமாக உள்ள பூமரங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு பணியாற்றிய ஹட்டனை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டார். அவர் வதிரி பகுதியில் பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார். கைதானவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை, அங்கு பலர் வந்து போதைப்பொருள் வாங்கிச் சென்றுள்ளமை பற்றிய தகவல் கிடைத்துள்ளதால், பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் வாங்கியுள்ளார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைதானவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவரை நாளை (20) வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.