யாழில் 13 வயது மாணவி கர்ப்பம் காரணம் யார்? தலைமறைவான பெற்றோர்!

யாழில் 13 வயது மாணவி கர்ப்பம் காரணம் யார்?  தலைமறைவான பெற்றோர்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் 13 வயதுச் சிறுமி கர்ப்பமான நிலையில் தற்போது பெற்றோருடன் தலைமறைவாகியுள்ளார்.

தீவகப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட மாணவியின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் நல்லுார் சுற்றாடலில் பல கோடி ரூபா மதிப்பிலான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி வசித்து வந்துள்ளார்கள். மாணவி தனியார் பெண்கள் பாடசாலை ஒன்றில் கற்றுவந்துள்ளார்.

குறித்த மாணவி தந்தையின் சொகுசு வாகனம் மூலமே பாடசாலைக்கு சென்று வந்ததாகத் தெரியவருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாணவி மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தாயார் குக்குரல் இடவே அயலவர்கள் உடனடியாக மாணவியை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமடைந்ததாக வைத்தியரால் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த ஞாயிறு தொடங்கி குறித்த வீடு எவரும் இல்லாத நிலையில் பூட்டப்பட்டிருப்பதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். மாணவியின் தந்தை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருபவர் என தெரியவருகின்றது.