தபால் மூலம் போதைப் பொருள் விற்ற யாழ் மருத்துவபீட மாணவன்

தபால் மூலம் போதைப் பொருள் விற்ற யாழ் மருத்துவபீட மாணவன்

கூரியர் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 03ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 23 வயதுடைய சியம்பலாவெவ, ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவன் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்  பல்வேறு விதமான சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.