யாழ்ப்பாண மேக்கப்காரிகளுக்கிடையில் அடிபிடி!

யாழ்ப்பாண மேக்கப்காரிகளுக்கிடையில் அடிபிடி!

காகத்தை கொக்காக மாற்றுவதில் யார் பெரியவர் என்ற ரீதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள மேக்கப்காரிகளுக்கிடையில் அடிபிடிகள் தொடங்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கலியாண வீடு, சாமத்தியவீடு என்பவற்றையும் கடந்து தற்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை அழகிகளாக காட்டிக் கொள்ள பெண்கள் தலைகீழாக நின்று வருகின்றார்கள்.

அதனால் காகத்தை கொக்காக மாற்றும் திறமை படைத்த மேக்கப்காரிகளின் காட்டில் பண மழை கொட்டிவருகின்றது. வடிவேலுக்கு சாறிகட்டினால் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கும் பெண்களை தேவதைகளின் தோற்றத்தில் காட்டுவோம் என யாழ்ப்பாணத்தில் பல மேக்கப்காரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

ஒரு பெண்ணுக்கு மேக்கப் செய்வதற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டணத்தை குறித்த மேக்கப்காரிகள் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் உட்பட தமிழர்பகுதிகளில் லட்சக்கணக்கில் இந்த மேக்கப்காரிகள் உழைத்துவருகின்றார்கள்.

அத்துடன் தமிழர் கலாச்சாரத்துக்கு ஒவ்வாத வகையில் யாழ்ப்பாணம் உட்பட்ட இடங்களில் குறித்த மேக்கப்காரிகள் அழகுராணிப் போட்டிகளையும் நடாத்தி வருவதுடன் ஒரு சில மேக்கப்காரிகள் தங்களிடம் வரும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிவிடுவது போதைப்பொருள் கடத்தப் பயன்படுத்துவது போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபடுத்தி வருகின்றார்கள். இவ்வாறான செயற்பாடு கொண்ட மேக்கப்பாரிகள் தற்போது தங்களுக்குள் அடிபடத் தொடங்கியுள்ளது வெளிளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந் நிலையில் யாழ் ஊடக அமையத்தில், அழகுக்கலை நிபுணர்கள் என கூறிக் கொண்ட சில பெண்கள் கூடி தெரிவித்த கருத்துக்களை நாம் இங்கு தந்துள்ளோம்….

யாழ் மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகு கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் யாழ் ஊடக மையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா தினேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக்கலை தொடர்பான அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக்கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி யாழ்ப்பாணம் தவிர்ந்த பிரதேசங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகைதந்து யாழ்ப்பாணத்தில் புதிய அழகுக்கலை நிலையங்கள் திறக்கப்படுவது மட்டுமில்லாமல் அழகுக்கலை சார்ந்த குறிகியகால பயிற்சிப்பட்டறைகளும் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.

இதனால் எமது உள்ளூர் அழகுக்கலை ஆர்வம் கொண்ட மாணவர்களும் அழகுக்கலை நிபுணர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே யாழ் அழகுக்கலை நிபுணர்கள் குறித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

எமது ஒன்றியத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற 120க்கும் மேற்பட்ட அளகுக்கலை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒன்றியமானது யாழ் மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்தின் வழிநடத்தலில் இயங்கி வருகின்றது எனவும் பிரதீபா டினேஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் அழகுக்கலை தொழில் என்பது சருமங்கள், தோல் சார்ந்த சுகாதார விடயங்களோடு சம்பந்தப்படுவதால் உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதார பிரிவினரோடு இணைந்து அதற்கான அனுமதி வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா தினேஷ் தெரிவித்தார்.

குறிப்பாக அழகுக்கலை நிலையம் ஒன்றை திறப்பதற்கான வியாபார அனுமதியை வழங்குகின்ற பொழுது குறித்த நிலையத்தின் உரிமையாளர் NVQ level 4 சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயமானது. இதனை பரிசீலித்தே வியாபார சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்.

எனவே இந்த விடயங்களை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் அழகுக்கலை பயிற்சி நெறிகளை நடத்துவதென்றால் வகுப்பறை கட்டமைப்பு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது என அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் திருமதி பிரதிபா டினேஷ் தெரிவித்தார்.-