யாழில் ஐப்பன் மாலை போட்ட பக்தனின் துாசண பூசை!
யாழ் கே.கே.எஸ் வீதியில் ஸ்ரார் பூட்சிற்றிக்கு முன் சற்று முன் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றது.
ஐயப்ப மாலை போட்ட பக்தர் ஒருவரே நிறை வெறியில் நிலைதடுமாறி வந்து இன்னொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து அங்கு கூடி நின்றவர்கள் குறித்த ஐயப்ப பக்தருக்கு கும்பாபிசேகம் நடாத்தியுள்ளனர். அதனையடுத்து அவரது கைத்தொலைபேசியை எடுத்து அவரது தாயாருக்கு அங்கு நின்ற சிலர் அழைப்பை எடுத்து மகனின் செயற்பாடு தொடர்பாக கூறியுள்ளனர்.
உடனடியாக அங்கு தாயார் வந்துள்ளார். தாயாரையும் குறித்த ஐப்ப பக்தன் தாக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஐயப்ப பக்தனை ஆட்டோ ஒன்றில் ஏற்றி தாயார் கெஞ்சி மன்றாடி கொணடு செல்ல முற்பட்ட போதும் ஐயப்ப பக்தன் தான் குடிக்கவில்லை, பொலிசார் வரட்டும் பார்த்துக் கொள்கின்றேன் என அடம்பிடித்தபடி நிற்கும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.