அம்மா சைவம்! அப்பா கிறீஸ்தவம்! சிறுவயது மகள் மீது பாதிரியார் கொடூர தாக்குதல்!

அம்மா சைவம்! அப்பா கிறீஸ்தவம்! சிறுவயது மகள் மீது பாதிரியார் கொடூர தாக்குதல்!

யாழ் கொடிகாமம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு ஞாயிறு ஆராதனைக்குப் போகாத சிறுமி மீது பங்குத்தந்தையான பாதிரியார் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். சிறுமியின் தந்தை கத்தோலிக்கர். தாய் சைவசமயம். சிறுமி தந்தையுடன் சில வேளைகளில் மட்டும் தேவாலயம் சென்று வந்துள்ளார்.

இந் நிலையில் தொடர்ச்சியாக தேவாலயம் வருமாறு பங்குத்தந்தையான பாதிரியார் சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.

இதன் பின்னர் சிறுமி ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக குறித்த சிறுமியை அழைத்து பாதிரியார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள சிறுமி இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.