யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் இரவு வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அப்பெண்ணை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் போதைக்கு அடிமையானவர் என கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , தாய் , தந்தையர் இல்லாத நிலையில் , பேத்தியாருடன் தங்கியே வாழ்ந்து வருகின்றார் எனவும் , அண்மைக்காலமாக ஐஸ் போதைக்கு அடிமையாகி உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , அப்பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.