நூற்றுக்கணக்கான ஆணுறைகளை அள்ளிச்சென்றது யார்?

நூற்றுக்கணக்கான ஆணுறைகளை அள்ளிச்சென்றது  யார்?

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பெட்டி மாயமாகியுள்ளது.

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பெர் இடங்களில் ஆணுறை வழங்கும் திட்டம் அண்மையில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர்களுடன் வருபவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் சிறிய பெட்டியொன்றில் ஆணுறைகள் வைக்கப்பட்டிருந்தன. தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சில நாட்களின் முன்னர் அந்த அட்டைப் பெட்டியையே யாரோ ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். அதனுள் சுமார் 500 வரையான ஆணுறைகள் இடப்பட்டிருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.