ரியா கிறீம்கவுஸ்சில் நடந்த வாள் வெட்டு
யாழ் தெல்லிப்பழைப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக்குழு மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அண்மையாக கனி ரௌடிக்குழுவை சேர்ந்த ஒருவர் மீது, வாகனத்தில் வந்த ஜெகன் ரௌடிக்குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர்.
அப்போது, கடமை நிமித்தம் வந்த போக்குவரத்து பொலிசார் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.
ஜெகன் குழு ரௌடிகள் தப்பியோடிய போது, வாகனத்தை நோக்கி 4 தடவை துப்பாக்கிச்சூடு நடத்தினர். என்றாலும், ரௌடிகள் தப்பியோடி விட்டனர்.
தப்பியோடும் போது வாள்களை வீசியெறிந்துள்ளனர். வட்டிக்கு பணம் பெற்றவர்களை கடத்திச் சென்று அடித்து சித்திரவதை செய்யும் வீடியோக்கள் கடந்த வருடம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் ஜெகன் ரௌடிக்குழுவுடன் தொடர்புடையவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.