யாழில் இராணுவ வாகனம் மோதி வசந்தாதேவி படுகாயம்!!
இராணுவ வாகனம் மோதியதில் வயோதிப பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் அப்பகுதியை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி (வயது 60) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.