எல் நினோ: 161,451 பேர் பாதிப்பு
எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிப்பு
எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச்
சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12-09-2026) காலை வெளியிட்ட
அண்மைய தரவு அறிக்கையின்படி, நாடு முழுவதிலும் உள்ள 36 பிரதேச செயலக
பிரிவுகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்கமைய 36 பிரதேச
செயலக பிரிவுகளிலும் வாழும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்கு
தற்போது குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.