15 வயது மாணவியை கடத்திச் சென்று வல்லுறவுக்குள்ளாக்கிய 3 பேர் கைது!
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேகநபர்கள் கடந்த 5ஆம் திகதி மாணவியை ஆரையம்பதி பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை தாக்கி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.