யாழில் 63 வயது தாத்தாவுக்கு மனைவியின் தங்கையுடன் காதல்!

யாழில் 63 வயது தாத்தாவுக்கு மனைவியின் தங்கையுடன் காதல்!

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் மனைவி தாக்கியதில் தலையில் காயமடைந்த 63 வயதான முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஓய்வூதியரின் 57 வயதான மனைவியும் சாவகச்சேரியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக கடமையாற்றுகின்றார். இந்நிலையில் உச்சந்தலை மற்றும் தோள்மூட்டுப் பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் குறித்த ஓ்ய்வூதியர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

தலையில் தேங்காய் விழுந்தாக தெரிவித்தே குறித்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு வந்த ஓய்வூதியரின் மனைவியின் தங்கை ஓய்வூதியருக்கு தனது அக்காவே அடித்ததாக தெரிவித்து பொலிசாரிடம் முறையிட ஆயத்தமான போது ஓய்வூதியரின் மகன் அதனை தடுத்து நிறுத்தியதாக தெரியவருகின்றது.

பிள்ளைகள் திருமணம் முடித்து பேரப்பிள்ளைகளும் உள்ள நிலையில் குறித்த ஓய்வூதியருக்கும் மனைவியின் தங்கைக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்துள்ளது. மனைவியின் தங்கைக்கு 53 வயது. ஒரு பெண் பிள்ளைக்கு அம்மா.குறித்த பெண் பிள்ளை அண்மையிலேயே திருமணமாகி வெளிநாடு சென்றுள்ளது.

மனைவியின் தங்கையின் கணவர் 2006ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கையின் போது காணாமல் ஆக்கப்பட்டவர். கொழும்பிலிருந்து வாகனங்கள் வாங்கி விற்பனை செய்துவந்த மனைவியின் தங்கையின் கணவர் காணால் ஆக்கப்பட்டதற்கும் குறித்த ஓய்வூதியரே காரணம் என அந் நேரத்தில் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள். விடுதலைப்புலிகளுக்கு வாகனங்களை விற்ற குற்றச்சாட்டிலேயே அவர் காணாமல் போனார்.

தனது தங்கையுடன் தனது கணவர் கள்ளத் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்து பலதடவைகள் மனைவிக்கும் முதியவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இந் நிலையிலேயே முதியவர் தலையில் கடும்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை வைத்தியசாலையில் அனுமதித்தது அவரது ஆண் மகனாவர். அவரும் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை. வைத்தியசாலையில் அனுமதித்து சில மணித்தியாலங்களில் அங்குவந்த மனைவியின் தங்கை அவருக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து அழுது குளறியதுடன் கடும் கோபமடைந்து பொலிசாருக்கு தொலைபேசியில் முறையிட முயன்றதாகவும் தெரியவருகின்றது. இதனை ஓய்வூதியரின் பிள்ளை தடுத்து நிறுத்தியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.