நடிகை விவகாரம்.. ஃபோனில் டீல் செய்த நடிகர்?

நடிகை விவகாரம்.. ஃபோனில் டீல் செய்த நடிகர்?

சமீபத்தில் உருவான சர்ச்சை தொடர்பாக நடிகைக்கு நடிகர் ஃபோன் செய்து ஆறுதல் சொன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த அந்த நடிகைக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். பல வருடங்களாகவே டாப் இடத்தில் இருந்த நடிகைக்கு கடந்த சில வருடங்களாகவே வாய்ப்புகள் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்திருந்தன. சூழல் இப்படி இருக்க பெரிய இயக்குநர் இயக்கிய ஒரு படத்தில் நடித்த பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் நடிகை.

பல வருடங்கள் கழித்து: அந்தப் படத்தின் மூலம் கிடைத்த வெளிச்சத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் மீண்டும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்திருக்கிறார். போட்டி நடிகர்கள் என்று கூறப்படும் இருவரின் படங்களிலும் நடித்துவிட்டார். அதில் ஒரு நடிகருடன் நடித்த படம் பெரிய ஹிட்டானது. மற்றொரு ஹீரோவுடன் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் முடியப்போகிறது.

சர்ச்சை: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவரை சுற்றி பெரும் சர்ச்சை உருவானது. அவருக்கு ஆதரவாக தமிழ் மட்டுமின்றி பிற மொழி திரையுலகத்தை சேர்ந்தவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இருந்தாலும் டாப் ஹீரோ என்று மதிக்கப்படும் ஒருவர் மட்டும் இன்னமும் வாய் திறக்கவில்லை. அதை கவனித்த ரசிகர்கள் என்ன இவர் இந்த விஷயத்துக்கும் அமைதியாக இருக்காரே என்ற குரல்கள் எழ ஆரம்பித்தன.

ஆறுதல் சொன்ன நடிகர்?: நடிகையை பொறுத்தவரை தனது கரியரில் பல போராட்டங்களை சந்தித்தவர். ஆனாலும் அதையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்து நிற்கிறார். அதனாலேயே அவர் மீது பலருக்கும் மதிப்பு உண்டு. இதற்கிடையே பல வருடங்களாக பழக்கமான நடிகர் தனக்காக இந்த விவகாரத்தில் குரல் கொடுப்பார் என்று நடிகை ரொம்பவே எதிர்பார்த்திருந்தாராம்.

ஆனால் நடிகரோ வாய் திறக்காததால் கொஞ்சம் அப்செட்டானாராம் நடிகை. இதை தெரிந்துகொண்ட நடிகர்; நடிகைக்கு ஃபோன் செய்து உனது கரியரில் நீ எவ்வளவோ பிரச்னைகளை பார்த்துட்ட. அதையெல்லாம் தாண்டித்தான் இந்த இடத்துல நிக்கிற. இதெல்லாம் உனக்கு அசால்ட். இதையும் நீ தைரியமாக எதிர்கொண்டத பார்க்குறப்ப மகிழ்ச்சியா இருக்கு என்று ஆறுதல் சொன்னாராம்.

இதை கேள்விப்பட்ட திரைத்துறையில் ஒரு சிலர் நடிகைக்கு நடிகர் ஃபோனில் சொன்ன ஆறுதலை ஒரு ட்வீட்டாக போட்டிருக்கலாமே என கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் நடிகர் ஃபோனில் ஆறுதல் சொன்னதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது நடிகைக்கும், நடிகருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வந்த கிசுகிசுவால் ஏற்கனவே நடிகர் வீட்டில் எழுந்த பூகம்பம் இன்னும் அடங்கவில்லையாம்.

இப்படிப்பட்ட நேரத்தில் பொதுவெளியில் நடிகைக்கு ஆறுதல் சொன்னால் வீட்டில் சுமூகமான சூழல் மீண்டும் உருவாகாது என்று நடிகர் நினைக்கிறாராம். முக்கியமாக மனைவியின் கோபம் இன்னும் அடங்கவில்லையாம். அவரது கோபத்தை அடக்க வேண்டுமென்றால் இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் என்று நடிகர் முடிவெடுத்ததால்தான் தனியாக ஃபோனில் அழைத்து ஆறுதல் சொன்னாராம் நடிகர்..