ரவீந்திரனும் மனைவியும். தற்கொலை செய்ததற்கான காரணம் இதுதான்!!
அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (21-11-2023) இடம்பெற்றுள்ளது.
தற்போது, இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.கணவன் – மனைவி இருவருக்கும் கடன் தொல்லை அதிகம் இருந்தமையினால் அவற்றை திருப்பி தருமாறு கடன் கொடுத்தவர்கள் கேட்ட நிலையில் திருப்பி செலுத்த முடியாததால் இருவரும் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.