யாழ் சிறைக்குள் கிழவிகளால் வல்லுறவுக்குள்ளான அழகிய பெண் பட்டதாரியின் கதை இது! video Part 2

யாழ் சிறைக்குள் கிழவிகளால் வல்லுறவுக்குள்ளான  அழகிய பெண் பட்டதாரியின் கதை இது! video Part 2

வம்பன் இணையத்தளத்தில் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான சில சம்பவங்களை பதிவிட்ட காரணத்தால் யாழில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 20க்கும் மேற்பட்டவர்களால் அச்சுறுத்தப்பட்டார்.

எமது இணையத்தளத்திற்கு குறித்த ஊடகவியலாளரே போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை தந்ததாக சந்தேகித்தவர்களே குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்குள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்குள் புகுந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 6 பெண்களில் 3 பேரின் புகைப்படங்கள் பொலிஸ் தரப்புக்களிலிருந்து வெளியாகியுள்ளது.

குறித்த பெண்களில் ஒருவர் செலுத்தி வந்த BIE 9150 எனும் மோட்டார் சைக்கிள் மலையகப் பதிவில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த மோட்டார்சைக்கிள் அல்லது குறித்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக கோப்பாய் பொலிசாரிடம் முறையிடலாம்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 25ம் திகதியில் யாழ் கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ராஜ்குமார் ஜெயந்தி எனும் 22 வயதான யுவதியின் மறைக்கப்பட்ட புகைப்படத்தை எமது ஊடகம் வெளியிட்டிருந்தது.

அந்த புகைப்படத்தை அகற்றுமாறு கோரி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளை தடுத்து நிறுத்தவே போலி சாட்டுடன் இவர்கள் குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வாளர்களின் தகவல்களின் படி குறித்த யுவதி மற்றும் அவளது உறவுகளில் சிலர் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புபட்டவர்கள் என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கழலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி, பல்கலைக்கழக கல்லுாரி, பிரபல பாடசாலைகள் போன்றவற்றுக்கு அருகாமையில் கொக்குவில் புகையிரதநிலைய சுற்றுவட்டாரத்துக்குள் இந்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் உலாவுவது மிகவும் ஆபத்தான விடயமாக கருதப்படுகின்றது.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் தற்போது பெண்களை வைத்தே போதைப்பொருளை விற்பனை செய்வது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது.

ஒரு ஆண் போதைப்பொருள் கடத்தும் போது பிடிபடுவதற்கும் ஒரு பெண் போதைப்பொருள் கடத்தும் போது பிடிபடுவதற்கும் இடையில் பொலிசாருக்கு சில சிக்கல்கள் உள்ளன. ஒரு பெண்ணை போதைப்பொருளுடன் கைது செய்வதற்கு இன்னொரு பெண் பொலிசின் தேவை ஏற்படுகின்றது.

பெண் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் தமது மார்புக்கச்சை மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் வைத்தே போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இவர்களை கைது செய்ய ஆண் பொலிசார் முயன்றால் பொலிஸ் அதிகாரியாக வடிவேலு விபச்சாரப் பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து நிர்வாணமாக நின்ற கதைபோல் ஆகிவிடும் ஆண் பொலிசாரின் நிலை.

ஏனெனில் கல்வியங்காட்டில் ஊடகவியலாளரின் வீட்டுக்குள் புகுந்த பெண்களும் தங்களது மேலாடையை கழற்ற முற்பட்டதாகம் தனது மோட்டார் சைக்கிள் திறப்பை எடுத்து ஒரு பெண் அவளது மார்ப்பு கச்சைக்குள் வைக்க முற்பட்டதாகவும், அத்துடன் திறப்பை எடுக்க முற்பட்ட போது, ஊடகவியலாளர் குறித்த பெண்ணின் கையை பிடித்து அகற்ற முற்பட்ட போது தன்னை கற்பழிக்கிறான் என குறித்த பெண் கத்தியதாகவும் ஊடகவியலாளர் பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போதைப்பொருள் கடத்துபவர்களை பொலிசார் அடையாளப்படுத்தி வைத்திருந்தாலும் அவர்களை எந்தநேரமும் கைது செய்ய முடியாது. அவர்களை கையும் மெய்யுமாக போதைப்பொருட்களுடன் கைது செய்தால் மாத்திரமே நீதிமன்றில் அவர்களை ஆயர்ப்படுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். அத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக நீதிமன்றில் ஆயராகி சட்டத்தரணிகள் சிலர் அவர்களுக்கு ஊக்கமாகச் செயற்படுவதும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

இந்தியாவிலிருந்து வரும் கேரளகஞ்சாவை தென்பகுதிக்கும் தென்பகுதியிலிருந்து வரும் ஹேரோயின் உட்பட்ட விலை கூடிய போதைப்பொருட்களை வடபகுதிக்கும் கடத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பல்வேறுபட்ட யுக்திகளைக் கையாண்டு வருகின்றார்கள்.

அண்மையில் வடபகுதியில் அம்புலன்ஸ் சாரதியும் சுகாதாரதுறையைச் சேர்ந்த உத்தியோகத்தரும் போதைப்பொருள் கடத்திப் பிடிபட்டமை அறிந்ததே.

அம்புலன்ஸில் எதைக் கொண்டு சென்றாலும் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதை அறிந்து அம்புலன்ஸ் சாரதியின் மண்டையைக் கழுவி போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்தவர்களின் செயற்பாட்டைப் பார்க்கும் போது அவர்கள் எங்கு எல்லாம் ஊடுருவி உள்ளார்கள் என்பது விளங்கும்.

போதைப் பொருள் கடத்தல்களில் தமிழின விடிவுக்காக போராடி புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சிலரும் ஈடுபடுகின்றார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு கேரள கஞ்சாவை கொண்டு செல்வதற்கு குறித்த கஞ்சாவின் பெறுமதியில் 10 வீதம் கடத்தல்காரர்களுக்கு வழக்கப்படுவதாக தெரியவருகின்றது.

உதாரணமாக 50 கிலோ கஞ்சாவை தென்பகுதியில் விற்பனை செய்பவர்கள் கூறும் இடத்தில் வெற்றிகரமாக கொண்டு போய் சேர்த்தால் சேர்ப்பவர்களின் வங்கிக் கணக்குக்கு 10 லட்சம் ரூபா உடனடியாகவே வைப்பிலிடப்படும் . இதன் காரணமாக பலர் சிறை வாழ்கையையும் பொருட்படுத்தாது கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களில் பிரதான சூத்திரதாரிகளை நெருங்குவதற்கு பொலிசார் கூட அஞ்சும் அளவுக்கு அவர்களின் உயர்மட்டத் தொடர்புகள் காணப்படுகின்றது. சாதாரண பொலிசாரோ அல்லது பொலிஸ் புலனாய்வாளர்களோ இவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று இவர்களை சந்திக்க கூட முடியாது.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தென்பகுதியில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அரசியல் பிரமுகர்கள் போன்றவர்களுடன் குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் நெருக்கமான நிலையில் நட்பு கொண்டிருப்பார்கள். ஆனால் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இவர்களின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கை தெரியாமலும் இருக்ககூடும்.

பிடிபட்டால் மரணதண்டனை கிடைக்க கூடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த போதைப்பொருள் குற்றவாளிகள் மிகவும் சொகுசு வாழ்கை வாழும் போது எவ்வித குற்றமும் செய்யாது தமது கணவன், பிள்ளைகளை போதைப்பொருள் பாவனைக்கு பறி கொடுத்து நடைப் பிணமாக வாழும் பெற்றோரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

மரணதண்டனை பெற வேண்டிய ஒரு குற்றவாளியான யாழ்ப்பாண பிரபல வர்த்தகர் ராஜனின் போதைப்பொருள் கடத்தல்கார மகனின் பணக்கார வாழ்க்கையின் ஒரு பகுதிக் காட்சிகளை இங்கு தந்துள்ளோம்.

யாழ் வலிகாமம் பகுதியில் இரு பிள்ளைகளைப் பெற்று தற்போது மனநிலை பாதிக்கும் அளவுக்கு தமது மூத்த ஆண்பிள்ளையால் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ள ஆசிரிய குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் ஒன்றை தந்துள்ளோம்…

வலிகாமம் பகுதியில் வசதி படைத்த ஒரு குடும்பத்தில் தந்தையும் தாயும் ஆசிரியர். தாயாரின் பெற்றோர் ஆரம்பகாலம் முதலே வசதியானவர்கள். தாயாரின் சகோதரங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மாணவனின் தந்தை வெளிமாவட்டத்தில் கற்பித்து ஓரிரு வருடத்திற்கு முன்பே யாழிற்கு இடமாற்றம் பெற்றார். வெள்ளி மாலை தனது வீட்டுக்கு வந்து திங்கள் அதிகாலை மீண்டும் வெளிமாவட்டத்திற்கு சென்றுவிடுவார். தனது வயதான பெற்றோருடன் தனது இரு பிள்ளைகளுடன் வலிகாமத்தில் தனது சொந்த வீட்டில் தங்கியிருந்து வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலையில் கற்பித்து வந்தார் ஆசிரியை.

மூத்த மகன் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் ஏ.எல் எடுத்து வர்த்தகப் பிரிவில் சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் அளவுக்கு தகுதி பெற்றவர். பாடசாலையில் கற்கும் வரையில், எந்தவித சச்சரவுகளுக்கோ அல்லது குழப்படிகளுக்கோ ஆளாகாத, நன்றாக கற்கக் கூடிய மாணவன் என்ற பெயரெடுத்தவன்.

ஆனால் தற்போது தீவிர போதைப்பொருள் அடிமை. இவனை வீட்டிலேயே வைத்து பராமரித்து தற்போது தாயே இவனுக்கு தேவையான போதைப்பொருளை எப்பாடுபட்டாவது பெற்றுக் கொடுத்து வருவதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுவிட்டான் என்ற சந்தோசத்தில் மாணவனை ஜிம் பயிற்சிக்கு (உடற்பயிற்சி நிலையம்) அனுப்பியதால் தற்போது நொந்து நுாலாகியுள்ளது முழுக்குடும்பமும்.

மாணவனின் தாயார் எமக்கு தெரிவித்தவற்றை நாம் இங்கு அப்படியே தந்துள்ளோம்.

ஜிம் சென்ற மாணவனுடன் நன்றாக நட்பாகி அவனுக்கு போதைப்பொருள் என தெரியாமலேயே ஹேரோயினை கொடுத்துள்ளார்கள் கயவர்கள். ஜிம் சென்று சில நாட்களிலேயே மகனின் நடத்தையில் பாரிய மாற்றத்தை நான் கண்டேன்.

மகன் சரியாக சாப்பிடுவதில்லை. அடிக்கடி பிளேன்ரீ கேட்கத் தொடங்கினான், பல நாட்கள் குளிக்காமல் இருந்தான்….ஆடு மாடுகள் போல் சிலவற்றை நாம் சொன்னால் மாத்திரமே செய்ய தொடங்கினான்.

உதாரணமாக இரவு 12 மணி வரையும் முழித்துக் கொண்டு அறைக்குள் ஒரு கதிரையில் இருப்பான். ”ஏன்டா போய் படுடா” என கூறிய பின்னரே போய் படுப்பான்…. என தாயார் மகனின் போதைப்பொருள் பாவனையின் ஆரம்ப நிலை அறிகுறியை கூறினார்.

அவனின் போக்கு விளங்காத எனக்கு மகனுக்கு செய்வினை யாரோ செய்துவிட்டார்கள் என நினைத்து வீட்டுக்கு சுவாமி ஒருவனை கொண்டு வந்து பார்வை பார்த்தேன் .இருப்பினும் அவனது செயற்பாடு மிகவும் வித்தியாசமானதாக காணப்பட்டதால் அவனை மனநிலை வைத்தியரிம் கொண்டு செல்ல முற்பட்ட போது அவன் அதற்கு மறுத்தான்.

அதன் பின்னர் நானும் கணவரும் மனநிலை வைத்தியரிடம் சென்று மகனின் நிலையை விளக்கிய போது அவர் கூறிய விடயங்களை வைத்தே அவன் போதைப்பொருளுக்கு அடிமை என நான் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

மகனின் நிலை தீவிரம் அடையும் வரை எமக்கு அவன் போதைப்பொருள் அடிமை என கண்டு பிடிக்க முடியாது போய் விட்டது. ஒவ்வொரு தேவைக்கும் என நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிம் வரை சில நாட்கள் என்னிடம் பணம் பெற்றுள்ளான்.

அதன் பின்னர் ஒரு தடவை அவன் அணிந்திருந்த ஒரு பவுண் சங்கிலி காணாமல் போனதாக கூறியபடி வீட்டுக்கு வந்தான். நான் அதை நம்பினேன். ஆனால் அவன் போதைப்பொருளுக்கே அதை கொடுத்து பெற்றுள்ளான் என தமக்கு பின்னரே தெரியவந்தது என கூறினார் தாயார்.

மகனில் ஆரம்ப அறிகுறிகள் கண்டு பிடிக்கப்பட்ட போதும் ஒவ்வொரு நாளும்  பின்னேரம் 5 மணியளவில் ‘ஜிம்’செல்கின்றேன் என கூறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் மகன் ‘நோர்மல்’ நிலையில் தான் இருக்கின்றான். கம்பஸ் செல்வது பற்றியும் ராக்கிங் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறன் போல இருக்கின்றது என நான் நினைத்தேன். போதைக்கு அடிமையான பின்னர் ‘ஜிம்’ செல்வதற்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியே சென்றான்” என தாயார் கூறினார்.

போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டான் என நாம் வைத்தியர் மூலம் அறிந்த பின்னர் வைத்தியர் கூறிய சில செயற்பாடுகளை செய்ய முற்பட்ட போது அவன் ஆவேசமடைதான். அவனது கோபத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்ததேன். அதன் பின்னர் வைத்தியரின் அறிவுரைகளை நான் பொருட்படுத்தாது போதைப்பொருள் பெறுவதற்காக வெளியே செல்ல முற்படும் அவனை வெளியே செல்ல விடாது அவனை நான் அறை ஒன்றுக்குள் அடைத்துவிட்டு நானும் அவனுடனேயே இருந்தேன்.

அவன் தன்னை வெளியே விடுமாறு கத்தி குளறியுள்ளான். அத்துடன் தனது கழுத்தையும் திருக முற்பட்டான். அவனது கைகள் நடுங்கியபடி இருந்தன…. என்னால் அவனது நிலையை கண்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. நானும் அவனுடன் சேர்ந்து அழுதேன். அன்று முழுவதும் தலையை சுவரில் இடிப்பதும் கத்துவதுமாக மகன் இருந்தான்… தானும் நித்திரை கொள்ளாது இருந்தேன்….

ஒரு கட்டத்தில் நள்ளிரவு அறை மேசையில் இருந்த ஊசி ஒன்றினால் தனது உடலை கிறத்தொடங்கினான். இரத்தம் வழிந்தோடியது…நான் அழுது குழறி அறைக்கதவைத் திறந்தேன்… கணவர் வந்து அவனை தடுத்து நிறுத்தினார். மகனின் கை, கால், நெஞ்சுப்பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தோடியது.

நான் கத்திக் குளறியபடி அயல்வீட்டிலிருந்த ஆட்டோவை பிடித்து அவன் திமிரத் திமிர அவனை ஏற்றிச் சென்று தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சையளித்தோம். அவர்களும் அவனை போதைப்பொருள் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு கூறியும் நாம் மீண்டும் வீட்டுக்கு அவனை கொண்டு வந்தோம்.

போதைப்பொருள் கிடைக்காத காரணத்தால் மகன் புழுப்போல நெளிந்து கதறினான். தற்கொலைக்கு முயன்றான். நானும் எனது கணவரும் பாடசாலைக்கு லீவு போட்டு அவனுடன் கூட இருந்தோம். ஆனால் அவனது நிலை மாறவில்லை. ஒன்றும் சாப்பிடாது அடம்பிடித்தான். அவனுக்கு மூச்சு திமிறியது. எம்மிடம்  கையெடுத்து கும்பிட்டு எனனை வெளியே போகவிடு… இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என கெஞ்சிய போது எம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டது.

எனது கணவரும் அவனிடம் சிலவற்றை கூறி தானும் உன்கூட வருகின்றேன்… உனக்கு போதைப்பொருள் விற்பவர்களை எனக்கு அறிமுகம் செய்து வை… அதன் பின்னர் நானே உனக்கு வாங்கித் தருகின்றேன் என கூறவும் அவன் அதற்கு உடன்படவில்லை. அவன் பைத்திய நிலைக்கு மாறுவது போல் இருந்ததால் அவனை நாம் வெளியில் விட்டோம். அவன் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக எங்கோ சென்றான். சென்று வந்த பின்னர் மிகவும் அமைதியாக காணப்பட்டான்.

அவனது அந்த அமைதியும் சந்தோசமும் எமக்கு கவலை கலந்த ஒரு நிம்மதியை தந்தது. இருப்பினும் அவனை நாம் கேள்விகளால் துளைத்தோம். அவனிடமிருந்து சரியான பதிலைப் பெறமுடியவில்லை. நீண்ட நாளின் பின்னரே அவன் ”அம்மா” என்று என்னை அழைத்தான். அதுவும் போதைப்பொருள் உட் கொண்ட பின்னர். ”என்னை தொல்லைப்படுத்தாமல் இருங்கள் அம்மா, நான் இப்போது ‘நோர்மல்’ ஆக இருக்கின்றேன் . ஏன் என்னை சித்திரவதை செய்ய முற்படுகின்றீர்கள்.

உங்களிடம் எனக்கு தரக்கூடிய காசு இல்லாவிட்டால் என்னை வெளியே விடுங்கள். நான் கை நிறைய உழைத்து எனக்கான தேவைகளை நிறைவு செய்து நன்றாக இருப்பேன்’ எனக் கூறிய போது நான் வாய் விட்டு கதறி அழுதேன். எழும்பும் தோலுமாக மாறத் தொடங்கினான்.

அவனது தேவைக்காக நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபா என்னிடம் கேட்டு வாங்கிச் செல்வான். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அவனுக்கான போதைப் பொருளுக்கு அந்தப் பணம் போதுமானதாக இருந்துள்ளது. அவனது  ‘பேர்சினு்ள்’ நாம் கொடுக்கும் காசில் சொற்ப மிச்சம் இருக்கும்.

அவனுக்கு ஆயுள்வேத சிகிச்சை கொடுத்தால் போதையிலிருந்து விடுபடுவான் என நினைத்து சில செயற்பாடுகளை செய்ய முற்பட்டோம். ஆனால் அவன் எதற்கும் சம்மதிக்கவில்லை. அதன் பின்னர் அவனை சத்தான சாப்பாடுகள் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது என கூறினேன். அத்துடன் அவன் குளிப்பதே இல்லை. அதனால் அவனை ஒவ்வொரு நாளும் குளிக்கச் சொல்லி சாப்பிட வைத்த பின்னர் அவனுக்கு தேவைப்படும் பணத்தை கொடுத்து வந்தேன்.

எனது கணவர் தனது நெருங்கிய நண்பர்களை கொண்டு மகன் எங்கு செல்கின்றான் என அவனை பின்தொடர்ந்து அவதானித்த போது ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு சாப்பாட்டுக் கடைக்குள் புகுந்ததாக கூறினார்கள்.

அங்கு அவர்கள் சென்று அவனுக்கு சற்று தொலைவில் அமர்ந்து கண்காணித்த போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் அவனிடம் வந்த இருவர் அவனுடன் சேர்ந்து பிளேன்ரீ குடித்த பின்னர் அவனிடம் இரு பேனைகளை கொடுத்துச் சென்றதாக கணவனின் நண்பர்கள் தெரிவித்திருந்தார்கள். அதன் பின்னர் அவனது அறைக்குள் சென்று அவதானித்த போது ஒரு பேனை ரீபிள் போதை பவுடரால் நிரப்பட்டிருந்ததை அவதானித்தேன். 

அவனிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அதன் பின்னர் அவனை பொலிசார் பின் தொடர்ந்து சென்று குறித்த கடையில் ரீ குடித்து 2 பேனை கொடுத்துச் சென்ற விடயத்தை பொலிசார் அவதானித்ததுள்ளதாகவும் அடுத்த தடவை உன்னையும் உனக்கு போதைப் பொருள் கொடுப்பவர்களையும் பொலிசார் கையும் களவுமாக பிடிக்கவுள்ளார்கள்.

பிடித்தால் நீ சிறைக்குள் சென்றால் திரும்ப வர முடியாது. ஆகவே இனிமேல் வெளியில் போகாது இங்கேயே போதைப்பொருளை வரவழைக் கொள் என கூறினேன். அவன் மௌனமாக இருந்தான். அடுத்த நான் நான் கூறிய ஐடியாவுக்கு அவன் உடன்பட்டான்.

தொலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டான்.  தற்போது ‘டோர் டெலிவரியில்’ போதைப் பொருள் கிடைக்கின்றது. பணம் தொலைபேசியூடாக அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சையில் எனக்கு நம்பிக்கையில்லை. அங்கு எனது மகனை அனுப்பினால் அவன் சிலவேளை இறந்துவிடுவான். எனது கண்ணு முன் அவன் வாழட்டும் என கூறி குறித்த ஆசிரியை அழுதார்.

அதே வேளை அவன் பாவிக்கும் போதைப் பொருளுக்குள் தான் சில கலப்படங்கள் செய்துவிடுவதாகவும் அவனுக்கு அது தெரியாது என்றும் இருப்பினும் அவன் அதனைப் பாவித்த போதும் அதில் கலப்படம் இருப்பதாக இன்னும் அறியவில்லை என்றும் கூறினார். அத்துடன் இவ்வாறு அவனை கொஞ்சம் கொஞ்சமாக நான் திருத்திவிடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளார் குறித்த ஆசிரியை.

ஊடகத்தில் வெளியிடமாட்டோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் குறித்த ஆசிரியை தந்த இந்தத் தகவல்களை மனச்சாட்சியின்றி நம்பிக்கைத் துரோகத்துடன் இங்கு வெளியிட்டுள்ளோம்.  எம்மை நம்பிக்கையுடன் குறித்த ஆசிரியைக்கு அறிமுகப்படுத்தியவரிம் நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம். 

இதை வாசிக்கும் யாராவது ஒரு பெற்றோர் தனது பிள்ளையில் இனியாவது அக்கறை கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இந்த தகவலை பகிர்ந்துள்ளோம். அவ்வாறு பெற்றோர் அவதானமாக செயற்பட்டு தமது பிள்ளைகளில் கொள்ளும் கரிசனையால் ஆசிரியையின் குடும்பத்திற்கு சில வேளை கடவுளின் கருனை கிடைக்கலாம்……..

யாழ் சிறைக்குள் கிழவிகளால் வல்லுறவுக்குள்ளான கஞ்சா விற்கும் அழகிய பெண் பட்டதாரியின் கதை மற்றைய பதிவில் விரைவில் வெளியாகும்…… அத்துடன் போதைப்பொருளால் பாதிப்புக்குள்ளானவர்களின் நம்பமுடியாத உண்மைச் சம்பவங்களும் நாம் இத் தொடரில் தொடர்ச்சியாக வெளியிடுவோம்...

நன்றி…