நண்பியைத் தேடி சுவிஸ் சென்ற லண்டன் யாழ் தினேஸ் மீது கடும் தாக்குதல்! அந்தரங்க வீடியோ எடுக்கப்பட்டதா?
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் 36 வயதான இளம் குடும்பஸ்தர் தினேஸ் சுவிஸ்லாந்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் சுவிஸ்லாந்தில் வசிக்கும், யாழ்ப்பாணத்தில் தன்னுடன் படித்த தனது பாடசாலை நண்பி ஒருவரைச் சந்திக்கச் சென்றதாக தெரியவருகின்றது.
பாடசாலை நண்பர்கள் ஆண்டு இறுதியில் சுவிஸ்லாந்தில் ஒன்று கூடலை வைப்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள தனது கணவர் சுவிஸ் சென்றதாக தினேசின் மனைவி தினேசின் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதே வேளை தான் தனது பாடசாலை நண்பியின் வீட்டுக்கு சென்று பின்னர் அவ் வீட்டுக்கு அருகில் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது முகத்தை கம்பளத்தால் மூடி மறைத்தபடி வந்த 4 பேர் தன்னை வாகனத்துக்குள் இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதாகவும் கூரான ஆயுதத்தால் தனது அந்தரங்கப் பகுதி மற்றும் பின்பகுதியில் குத்திக் காயப்படுத்தியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அத்துடன் தான் அணிந்து சென்ற தங்கச் சங்கிலி மற்றும் 500 ஸ்ரேலிங் பவுண், பெறுமதி மிக்க தொலைபேசி மற்றும் பல பொருட்களை அவர்கள் பறித்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னைக் கடத்தி தாக்கியவர்கள் காப்பிலிகள் எனவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார். இருப்பினும் தினேஸ் கூறிய இடத்தில் அவர் கடத்தி தாக்கப்பட்டதற்கான சிசிரீவி காட்சிகள் கிடைக்கவில்லை.
இதே வேளை தினேஸ் தனது கள்ளக்காதலியுடன் ஒன்றாக இருக்கும் போது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்
அவர் நிர்வாண நிலையில் தாக்கியவர்களை கெஞ்சும் காட்சிகள் அடங்கிய வீடியோ கள்ளக்காதலியின் கணவன் உட்பட்டவர்களிடம் இருப்பதால் தினேஸ் கடும் காயமடைந்திருந்தும் பொலிசாருக்கு உண்மையை தெரிவிக்க மறுக்கின்றார் எனவும் தினேஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.