யாழ்ப்பாணம் உடுவில் – கற்பக பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
கடந்த 11ம் திகதி திடீர் சுகவீனமுற்று, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
கடந்த 03ம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் , 11ம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இறப்பு விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2)இதேவேளை கடந்த சனிக்கிழமை பரீட்சை ஒன்றுக்காக காய்ச்சலுடன் கொழும்பிற்கு சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயது சிவமுகுந்தினி எனும் யுவதி ஒருவர் கொழும்பில் உயிரிழந்திருந்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில்
B.COM முடித்த நிலையில், நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த இவர், யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதே டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், பரீட்சைகாக கொழும்பிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் வைத்து காய்ச்சல் தீவிரமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை(09) உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3)இதேவேளை யாழ். குப்பிழான் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் புற்றுநோய் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குப்பிழான் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ர.சுதர்சனா என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் யா/வசாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார். இவரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.