காணாமல் போன 15 வயது மாணவி சடலமாக மீட்பு!

காணாமல் போன 15 வயது மாணவி சடலமாக மீட்பு!

காணாமல் போன பாடசாலை மாணவியின் சடலம் கொலன்ன, உள்ளிந்துவெவ பிரதேசத்தில் கிங் கங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 04, பனீல்கந்த, உள்ளிந்துவெவைவைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய யேசுதாசன் ரஷ்மி பபசரா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.

இவர் அனில்கந்த தமிழ் வித்தியாலய மாணவியாவார்.

இவர் 8ஆம் திகதி மாலை ஐந்து முப்பது மணியளவில் காணாமல் போனார். அன்றைய தினம் அவர் காணாமல் போனமை தொடர்பில் குடும்ப உறவினர்கள் கொலன்ன பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். பின்னர், உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அவரது சடலத்தை கிங் கங்கையில் கண்டனர்.

அவர் இறந்த விதம் இன்னும் வெளிவரவில்லை. கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.