கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!

கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!

கிளுகிளுப்பான கதை என நினைத்து உடனேயே லிங்கை ‘கிளிக்’ செய்து வந்த எமது உறவுகளுக்கு வணக்கம்….. யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையால் நம்ப முடியாத, சினிமாவில் கூட வராத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக வம்பனில் வெளிவரும்…

யாழ்ப்பாணத்தில் மட்டும் கஞ்சா, ‘ஹேரோயின்’, ‘ஐஸ்’ உட்பட்ட போதைப் பொருள் அடிமைகள் கிட்டத்தட்ட 4500 ற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்து வரும் கணிப்பீடுகளை வைத்து அறிய முடிகின்றது.இந்த போதைப் பொருள் பாவனையாளர்களில் 15 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாழ், நல்லுார் பிரதேச செயலக பிரிவுகளில் வாழ்கின்றார்கள் என அறிய முடிகின்றது.

யாழில் இவர்களுக்கு இவ்வாறான போதைப் பொருட்களை விநியோகிப்பவர்கள் குழுக்களாக செயற்படுகின்றார்கள். இவர்களில் 5 குழுக்களை உள்ளடக்கிய சுமார் 60ற்கும் மேற்பட்டவர்கள் மிக முக்கிய போதைப் பொருள் விநியோகத்தர்களாக உள்ளார்கள்.

யாழில் பிரபல வர்த்தகர்கள் என்ற போர்வையில் இயங்கும் முக்கிய வர்த்தகர்கள் 4 பேர் (இன்னும் இவர்களை கையும் மெய்யுமாக பிடிக்க முடியாதுள்ளதாலும் இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறினால் ‘அலேட்’ ஆகிவிடுவார்கள் என்பதாலும் இவர்களை பற்றிய விபரங்களை தவிர்த்துள்ளோம்.) இந்த வலையமைப்புக்களில், ஒரு சில வலையமைப்புக்களின் பிரதான சூத்திரதாரிகளாக உள்ளார்கள் என எம்மால் அறிய முடிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கஞ்சா மட்டுமே கடல்வழியாக வரவழைக்கப்படுகின்றது. ஏனைய பெறுமதி கூடிய போதைப் பொருட்கள் தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து ‘பார்சல்’ வழியாக மிகச் சிறிய அளவு பெறுமதி கூடிய போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய அரசாங்க அதிகாரியின் மகன், யாழ்ப்பாணத்தின் முக்கிய பெண்கள் பாடசாலை பிரதி அதிபரின் மகனான பிரபல பாடசாலை மாணவன் (இவரைப் பொலிசார் கைது செய்தனர்) உட்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரபல சட்டத்தரணி (இவர் தொடர்பான விரிவான தகவல்களை பின்னர் தருகின்றோம்), பெண்கள் அமைப்பு ஒன்றின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் குடும்பப் பெண் மற்றும் பணக்கார யுவதிகள், கணவனால் போதைப் பொருள் பாவனைக்கு உட்பட்ட இளம் குடும்பப் பெண்கள் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் (இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து குழுவாகவே போதைப் பொருள் நுகரும் பழக்கம் உடையவர்கள்), பிரபல வர்த்தகர்கள் என உயர்தரமானவர்களிலிருந்து கழிவுகள் அகற்றும் பணியாளர்கள் வரை போதைப் பொருள் ஊடுருவி உள்ளது.

அத்துடன் பிரபல யாழ் அரசியல்வாதி ஒருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் அவரது பிரதான ஆதரவாளர்களும் இந்த வர்த்தகர்த்துடன் தொடர்பில் உள்ளார்கள். குறித்த அரசியல்வாதியுடன் இரவில் மனைவி படுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் அவர் இரவில் மாத்திரம் போதை ஊசி போடுவாராம்.. போட்டுவிட்டு மனைவியை வாயால் கடித்துக் குதறுவதால் மனைவி இரவில் அவருடன் தங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு குறித்த அரசியல்வாதி கடித்துக் குதறியதில் தொடைகள், மார்புகள், மற்றும் பிட்டப்பகுதிகளில் கடிகாயங்களுக்கு உள்ளாகி பிரபல வைத்தியரிடம் மனைவி சிகிச்சை பெற்றுள்ளார்.

”அவர் இப்படி செய்யும் போது நீங்கள் தள்ளிவிட்டு ஓடியிருக்கலாமே” என வைத்தியர் அரசியல்வாதியின் மனைவியைக் கேட்ட போது தன்னை புதுமையான உறவுக்கு உட்படுத்துவதாக கூறி கைகள், கால்களை கட்டிலுடன் கட்டி வைத்துவிட்டே கடித்துக் குதறியதாகவும் ‘ஏசி’ அறையாக இருந்ததால் தனது கதறல் வெளியில் கேட்கவில்லை எனவும் வைத்தியரிடம் மனைவி அழுதழு கூறினார் என குறித்த வைத்தியர் தன்னுடன் நெருக்கமான ஊடகவியலாளரிடம் கூறியிருந்தார்.

குறித்த அரசியல்வாதியை விட்டு சில மாதங்கள் பிரிந்திருந்த மனைவி அரசியல்வாதியின் தந்தை மற்றும் உறவுகளின் கெஞ்சல்களால் மீண்டும் இணைந்து வாழ்கின்றார். ஆனால் இரவில் அவருடன் படுப்பதில்லையாம்.

கஞ்சா தவிர்ந்த பெறுமதி கூடிய போதைப் பொருளை இலங்கையில் விநியோகிக்கும் அதி உயர் போதைப்பொருள் வியாபாரிகளின் முக்கிய இலக்கு யாழ்ப்பாணமாகும். கொழும்புக்கு, கண்டிக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்திலேயே அதி உயர் பணப்புழக்கம் இருக்கின்றது என அவர்கள் எண்ணுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் அவர்களால் விநியோகிக்கப்படும் போதைப் பொருளின் அளவு, யாழ்ப்பாணப் பணப்புழக்கத்துடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவானது என அவர்கள் கருதுகின்றார்கள். அதன் காரணமாக போதைப்பொருள் நுகர்வை அதிகரிக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்கள். கடந்த வருடம் யாழ் கொக்குவில் இரயில் நிலையத்திற்கு அருகில், ரெயிலில் குதித்து 22 வயதான போதைப் பொருள் விற்பனை செய்துவந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாள்.

அவளை தடுக்க முற்பட்ட அவளது தந்தையும் கடும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் தற்கொலை செய்தது எதனால் என்பது பலருக்கு தெரியாது. அவளது செத்த வீட்டுக்கு யாழ்ப்பாணத்திற்கு ‘ஐஸ்’ போதைப்பொருள் விற்கும் தென்பகுதி முக்கியஸ்தர் (பல பிடியாணைகள் உள்ள) வந்துள்ளதாக தகவல்கள் கொடுத்தும் பொலிசார் அவனை கைது செய்வதை தவற விட்டிருந்தனர்.

யாழில் இளைஞர்களை குறி வைத்து ‘ஜிம் சென்றர்களில்’ (உடற்பயிற்சி நிலையங்களில்) ‘பிளான்’ பண்ணி நுழையும் போதைப் பொருள் ஆசாமிகள் ( முழு விபரங்களை பின்னர் தருகின்றோம்.)

சரி இனி விடயத்துக்கு வருகின்றோம்….

சிறைக்குள் எனக்கு மேல் ஏறி மாறி மாறி உறவு கொண்ட கிழவிகள்!! யாழில் கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!!

ஊடகவியலாளர் ஒருவரின் அனுபவப் பகிர்வு இது…….

2013ம் ஆண்டு தொடக்கம். யாழில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அழகிய இளம் பெண் நீதிமன்ற கட்டட சிறைக்கூண்டுக்குள் அழுது குளறியவண்ணம் இருந்தாள். அவள் சத்தமிட்டு அழத் தொடங்க பொலிஸ் ஒருவர் போய் அவளை அச்சுறுத்தி, அழுதால் மேலும் சிறை கிடைக்கும் என கூறி அவளின் அழுகையின் சத்தத்தை குறைத்தார். ஆனால் பெண் அழுவதை நிறுத்தவில்லை.

இன்னொரு வழக்கின் தொடர்ச்சியை அவதானிக்க சென்ற எனக்கு அந்தக் காட்சி கண்ணை உறுத்தியது. அந்தப் பெண்ணின் உறவுகள் யாராவது அந்தச் சுற்றுவட்டத்தில் நிற்கின்றார்களா என அவதானித்தேன். யாரும் அவளை கவனித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பணக்காரக் களையான தோற்றத்துடன் பெண் காணப்பட்டாள். வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பதிவாளர் பகுதிக்குள் சென்று அன்றைய வழக்குகள் தொடர்பான விபரங்களை செய்தியாக்குவதற்காக பெற்ற போதே காசோலை மோசடியில் குறித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயம் தெரியவந்தது.

நீதிமன்றின் பின்பகுதியால் விளக்கமறியல் கைதிகள் வாகனத்தில் ஏறத் தொடங்கினர். அப்போது அவளும் அழுது குளறியபடி ஏறினாள். அவளது அழுகைச் சத்தத்தை அடுத்து சிறைக்கைதிகள் ஏறிய பஸ்சின் அருகில் சென்றேன். அப்போது 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்.

”””“அப்பா… அவர் வரேலையே“ என பஸ்சில் ஏறும்போதும் அந்தப் பெண் கத்தி கேட்டபடி ஏறினாள். பஸ் புறப்பட்டது. நான் அந்த பெண்ணின் தகப்பனை நெருங்கினேன்…. ”என்ன விசயத்துக்கு மகளுக்கு இப்புடி நடந்தது?” என கேட்டேன். அவர் மௌனமாக இருந்துவிட்டு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.

நானும் விடாது அவரைப் பின்தொடர்ந்து கேள்விகள் கேட்டபடி சென்றேன்…. ”நீ யார்? பொலிஸ் சிஐடியோ” என என்னை அவர் கேட்க நான் என்னை அடையாளப்படுத்தி அவரிடம் நம்பிக்கை வருமாறு சில வார்த்தைகளை கூறினேன்….. அதன் பின்னரே அந்தப் பெண்ணின் தந்தை என்னுடன் கதைக்க தொடங்கினார்.

அவரின் மகளின் பெயரில் அவரது மருமகன் சீட்டுதொடங்கியுள்ளார். மருமகன் ஆசிரியர். வன்னியில் கற்பித்து வந்துள்ளார். 2011ம் ஆண்டிலேயே 10 லட்சம் பெறுமதியான சீட்டு பிடித்துள்ளார்கள். 27 வயதான மகளும் வர்த்தக பிரிவு பட்டதாரி. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றவர். ஆனால் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த நேரத்தில் கலியாணம் நடந்துள்ளது. வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து விட்டு வீட்டில் இருந்த நேரத்திலேயே மருமகனின் சீட்டு முதலாளி ஆசை வந்துள்ளது.

25 பேர்வரை இணைந்து 10 லட்சம் சீட்டை கட்டியதாக தெரியவருகின்றது. முதல் சீட்டுப் பணம் இவர்கள் எடுத்துள்ளார்கள். அதற்கு 7 லட்சம் ரூபா பெறுமதியான கார் எடுத்துள்ளார். அதன் பின்னர் இரண்டாவது சீட்டும் முறையாக கட்டப்பட்டு யாரோ எடுத்துள்ளார்கள்.

பின்னர் வந்த சீட்டுக்களை எடுத்த 3 பேர் சீட்டுக்காசை கட்டாது விட்டதால் இவர்களுக்கு இறுக்கம் தொடங்கியுள்ளது. அதன் பின்னர் மீற்றர் வட்டிக்கு வாங்கி சிலருக்கு கட்டுக்காசு கொடுத்துள்ளார்கள். 6 லட்சம் ரூபாவை மாதம் 60 ஆயி்ரம் என்ற வட்டியில் பெற்றே சீட்டுக்கட்டியவர்களின் கட்டுக்காசுகளை கொடுத்தாக தெரியவருகின்றது. 6 லட்சத்திற்கு வட்டிக்கு வாங்கியவனுக்கு பிடிமானமாக இவர்கள் செக் ஒன்றைக் கொடுத்தே கடன் வாங்கியுள்ளார்கள்.

அந்த செக் பட்டதாரி பெண்ணி பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலேயே இருந்ததுள்ளது. வட்டிக்கு கொடுத்தவன் 6 மாதங்களின் பின்னர் வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் என கூறி அதற்கு பிடிமானமாக இன்னொரு செக் வாங்கியுள்ளான். அதன் பின்னர் அந்த செக்கை அழித்துவிட்டு 14 லட்சம் ரூபாவுக்கு செக் வாங்கியுள்ளான்.

இதனால் கணவனும் மனைவியுமாக வட்டியும் முதலும் கட்ட முடியாமல் திண்டாடியுள்ளார்கள். கார் உட்பட பட்டதாரிப் பெண்ணின் சில நகைகளும் விற்றும் முதலில் ஒரு பகுதியை கூட கொடுக்க முடியாது இருந்துள்ளது. அதன் பின்னரே பொலிசாரிம் விசாரணைக்கு சென்றுள்ளது.

தாங்கள் கொடுக்க 6 லட்சம் ரூபா மட்டுமே எனவும் ஏனைய காசு வட்டிப் பணம் என இவர்கள் கூறியும் அதற்கான ஆதாரங்கள் இவர்களிடம் இ்ல்லாததால் செக் மோசடி என குற்றம் சாட்டப்பட்டது.குறித்த திகதியில் நீதிமன்றத்திற்கு வருமாறு கூறி பொலிசார் விசாரணை செய்துவிட்டு வழக்கு துண்டு கொண்டு வந்து கொடுத்துள்ளார்கள்.

பிரபல பெண் சட்டத்தரணி ஒருவரை சந்தித்து நடந்ததைகூறியுள்ளார்கள் கணவனும் மனைவியும். நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்… நான் பார்த்துக் கொள்கின்றேன் என கூறி அனுப்பியுள்ளார் குறித்த சட்டத்தரணி. தான் பாடசாலையில் அவரச அலுவல் உள்ளதால் வரமுடியாது உள்ளது. ஆனால் கட்டாயம் நானும் வரவேணும் என்றால் நான் லீவு கொடுத்து நிற்கின்றேன் என கணவன் கூறியுள்ளார்.

ஆனால் அவ்வாறு தேவையில்லை… நான் எல்லாம் பார்த்துக் கொள்கின்றேன் என அந்தப் பெண் சட்டத்தரணி கூறியுள்ளார். ஆனால் வழக்குக்கு இந்த பெண்ணின் பெயரை கூப்பிட்ட போது அந்த சட்டத்தரணி வராது இன்னொரு சட்டத்தரணியே நீதிபதி முன் நின்றுள்ளார்.

என்ன வழக்கு எனத் தெரியாமலே பிணை கேட்டதாக தந்தை எனக்கு கூறி அந்த சட்டத்தரணியை தாறுமாறாக ஏசினார். அதன் பின்னரே தனது மகளுக்கு விளக்கமறியல் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மகளுக்கு விளக்கமறியல் கொடுக்கப்பட்டது தனது மருமகனுக்கு தெரியாது என்றும் அவர் வன்னிக்கு அவசர பாடசாலை அலுவலாக சென்றவர் இன்னும் வரவில்லை என கூறினார்.

மிகுதி விபரங்கள் இன்னொரு பதிவில் விரைவில் உங்கள் முன்……………………