இந்த பஞ்சாயத்து தேவையா?.. தயாரிப்பாளரை விளாசிய வாரிசு நடிகர்கள்..
தயாரிப்பாளரை வாரிசு நடிகர்கள் அழைத்து லெஃப் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
வாரிசு நடிகர்களின் பினாமி என்றுதான் இன்றுவரை அந்தத் தயாரிப்பாளர் அறியப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் உறவினர்தான் இவர் என்ற பேச்சும் உண்டு. தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான பெயரையும் அந்தத் தயாரிப்பாளர் பெற்றிருக்கிறார்.
சில ஹிட் படங்களையும் மனிதர் தயாரித்திருக்கிறார். இதனாலேயே அவரது பேனரில் நடிக்க நடிகர்கள் ஆசைப்படுவதுண்டு.
நிலைமை இப்படி இருக்க வாரிசு நடிகர்களில் ஒருவர் நடித்த படத்தின் பஞ்சாயத்து பல காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் பொய் சொல்லிவிட்டார் என்று இவர் கூற; நீங்கள் இந்தப் படத்துக்கு தயாரிப்பாளரே இல்லை என இயக்குநர் கூற விவகாரம் நீதிமன்றம்வரை சென்றுவிட்டது.
கடந்த சில வருடங்களாக ஓய்ந்திருந்த இந்தப் பஞ்சாயத்து சமீபத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
உண்மையில் அந்த வீர படத்துக்கு ஞானோதயம் தயாரிப்பாளர் இல்லை என்றும் இயக்குநர்தான் தயாரிப்பாளர் என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி படம் ஆரம்பித்து பாதியிலேயே ஓடிப்போகிறவர் ஒரு தயாரிப்பாளரா என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.
அதிலும் பெரிய ட்விஸ்ட்டாக இயக்குநருக்கு ஆதரவாக திரைத்துறையிலிருந்து குரல்கள் எழுந்திருக்கின்றன.
இதனால் வாரிசு நடிகர்களும், தயாரிப்பாளரும் கொஞ்சம் அப்செட்டாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது எதற்காக இந்த விவகாரத்தை இப்போது கிளப்பினீர்கள் என இரண்டு நடிகர்களும் தயாரிப்பாளரை அழைத்து லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டார்களாம்.
அதுமட்டுமின்றி இப்போது அவருக்கு எல்லோரும் சப்போர்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதை நீங்கள் மட்டும்தான் சமாளிக்க வேண்டும். உள்ளே எங்களை இனி இழுக்கக்கூடாது எனவும் ஜகா வாங்கிவிட்டார்களாம்.
நிலைமை இப்படி இருக்க இயக்குநரை மட்டுமின்றி ஒரு ஹீரோவையும் இந்தத் தயாரிப்பாளர் படாத பாடு படுத்திவிட்டாராம். அதாவது அந்த ஹீரோ இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
அவர் இந்தத் தயாரிப்பாளரிடம் ஒரு படத்துக்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டு வெயிட் செய்துகொண்டிருந்தாராம். அப்போது படப்பிடிப்பு தொடங்க ரொம்பவே தாமதமாகிவிட்டதாம்.
அந்த சமயத்தில் வேறு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் ஹீரோவுக்கு வந்ததாம். ஆனால் தயாரிப்பாளர் தரப்போ இந்தப் படத்தை முடிக்காமல் இன்னொரு படத்தில் நடிக்கக்கூடாது என்றுதான் அக்ரீமெண்ட்டே போட்டிருக்கிறோம் என எடுத்துக்காட்ட ஹீரோவுக்கு செம அதிர்ச்சியாம்.
ஒருவழியாக அந்த விவகாரத்திலிருந்து தப்பி வேறு படத்தில் நடித்தாராம். அந்த விவகாரத்தை மனதில் வைத்துதான் ஒரு படத்தின் வெற்றி விழா மேடையில் கதறி கதறி அழுதாராம் அந்த ஹீரோ..