இத்தாலியில் ரயில் மோதி இலங்கையைச் சேர்ந்த நிரோஷன் பலி!!

இத்தாலியில் ரயில் மோதி இலங்கையைச் சேர்ந்த நிரோஷன் பலி!!

இத்தாலியில் ரயில்மோதி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ என்ற 46 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

இத்தாலியின் voghera ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் புகையிரத நடைமேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த புகையிரதத்தின் வேகத்தினால் ஏற்பட்ட காற்றினால் தள்ளுப்பட்டதாக இத்தாலியில் வசிக்கும் எமில் ரொஹான் என்பவர் தெரிவித்தார்.