கட்டுநாயக்காவில் 24 கோடியை உடம்பில் வைத்திருந்த பெண் கைது!

கட்டுநாயக்காவில் 24 கோடியை உடம்பில் வைத்திருந்த பெண் கைது!

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்தியப் பெண்ணுக்கு எதிரான சுங்க விசாரணையின் போது 11 கோடியே எண்பது இலட்சம் ரூபா தண்டப்பணத்தை உடனடியாக செலுத்தியதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். .

இந்த இந்தியப் பெண் நேற்று (22) அதிகாலை டுபாயிலிருந்து 5 கிலோ 500 கிராம் எடையுள்ள நகைகளை தனது உடலிலும் கைப் பையிலும் மறைத்துக்கொண்டு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பான சுங்க விசாரணை கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் கமால் பெர்னாண்டோவினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகளை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர், பதினொரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இந்த இந்தியப் பெண் கொண்டு வந்த நகைகளின் மொத்தப் பெறுமதி மற்றும் அபராதத் தொகை இருபத்தி நான்கு கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.