யாழில் 8 வயது மாணவி மீது ரீச்சர் மூர்க்க தாக்குதல்!

யாழில் 8 வயது மாணவி மீது ரீச்சர் மூர்க்க தாக்குதல்!

யாழில் மாணவியின் கைநகத்தை உடைத்த பெண் ஆசிரியர்..சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றம்..

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தூர் சோமாஸ்கந்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்பிக்கும் மாணவி மீது குறித்த ஆசிரியர் தாக்கியதில் மாணவியின் கை நகம் சிதைவடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

குறித்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என தெரியவரும் நிலையில் மாணவிக்கு உரிய நீதி வழங்கமப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.