யாழில் போதைப் பொருளுடன் கைதான பெண்ணிடம் 19 தொலைபேசிகள்
யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி பொலிஸார் கோரியுள்ளனர்.
துன்னாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைதான போது , அவரிடம் இருந்து 19 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டு இருந்தனர்.
குறித்த தொலைபேசிகள் களவாடப்பட்ட தொலைபேசிகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் , அண்மைய நாட்களில் தொலைபேசிகளை களவு கொடுத்தோர் ,
நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , தொலைபேசிகளை பார்வையிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
இதே வேளை குறித்த தொலைபேசிகளை பணம் இல்லாத காரணத்தால் போதைப்பொருள் விற்கும் பெண்ணிடம் அடகு வைத்து தொலைபேசிக்குரியவர்கள் போதைப்பொருள் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.