யாழில் நாளை ' விழித்தெழு ' வீதி நாடக ஆற்றுகை

யாழில் நாளை ' விழித்தெழு ' வீதி நாடக ஆற்றுகை

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ' விழித்தெழு ' என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் நாளை (01 - 02- 2023) யாழ்ப்பாணம் புல்லுக்குளம் மாலை 4 மணிக்கு ஆற்றுகை செய்யப்படவுள்ளது. 

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 கலைஞர்கள் பங்கு கொள்ளும் இந்நாடக ஆற்றுகையானது போதைப்பொருள்களிலிருந்து எவ்வாறு மாணவர்கள் மற்றும் இளைய சமூகம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை மையப் பொருளாகக் கொண்டு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நாடகவியலாளர் விஜயரூபன் அவர்களது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு மாணவர்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.