ஜெயந்தியுடன் தமிழ்ச்செல்வன் சிக்கல்!! ருசாங்கனை துாசணத்தால் ஏசியது ஏன்?
கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் ஓரிரு நாட்களுக்கு முன்னார் ஓய்வுபெற்றார். அவர் 2015ம் ஆண்டு தொடங்கி குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றுபவர்.
இந் நிலையில் ஜெயந்தி குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வழக்கப்பட்ட ரின்மீன்கள் தொடங்கி பல உணவுப்பொருட்களை கொள்ளையடித்ததாகவும் பாடசாலையில் பல ஊழல்கள் செய்ததாகவும் தமிழ்ச்செல்வன் என்ற கிளிநொச்சி ஊடகவியலாளர் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
குறித்த ஊடகவியலாளர் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சந்திரகுமார் அணிக்கு சார்பாக செயற்படுபவர் என கிளிநொச்சி நாட்டாமை சிறிதரன் தரப்பு பலதடவைகள் குற்றம் சாட்டி வந்திருந்தன.
தமிழ்ச் செல்வன் சிறிதரன் தரப்பையும் விட்டுவைக்காது கிளிநொச்சி பிரதேசசபையில் நடந்து வந்ததாக கூறப்படும் பல ஊழல்கள் தொடர்பான தகவல்களை வெளி்க் கொண்டு வந்தவர்.
தமிழ்ச் செல்வன் தன்னைப் பற்றி பதிவுகள் வெளிியிட்ட கொதியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் ஜெயந்தி தனது ஓய்வு பெறும் நாள் அன்று வழங்கப்பட்ட கௌரவநிகழ்வில் தமிச்செல்வன் தொடர்பாகவும் தான் ஊழல் செய்யவில்லை என்றும் கருத்துரைத்ததாக தெரியவருகின்றது. இதுதொடர்பாக மீ்ண்டும் தமிழ்ச்செல்வன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.
அந்தப் பதிவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளராக செயற்படும் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர் ருசாங்கன் எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ்ச்செல்வனின் வட்சப் குறுாப்பிற்கும் தனது கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்க்கருத்தாக தமிழ்செல்வன் பச்சைத் துாசணத்தில் ருசாங்கனை ஏசியுள்ளார். அந்த ஆதாரங்களை ருசாங்கன் தனது முகப்புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். அவற்றை நாம் இங்கு தந்துள்ளோம்.