யாழில் சங்கிலி அறுத்த கொள்ளையர்களை ஆனையிறவு வரை துரத்திச் சென்று பிடித்த இளைஞர்கள்!

யாழில் சங்கிலி அறுத்த கொள்ளையர்களை ஆனையிறவு வரை துரத்திச் சென்று பிடித்த இளைஞர்கள்!

தங்க ஆபரணத்தை மீட்க உதவிய முகமாலை இளைஞர்களின் துணிகரச் செயல் தொடர்பில் பலரும் பாராட்டி வருகின்றனர்.முகமாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு சென்ற பெண்ணின் தங்க ஆபரணம் திருடர்களால் அபகரிக்கப்பட்டது.

நேற்று இரவு 10.00 மணியளவில் முகமாலையில் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்ற பெண்ணின் தாலியினை அறுத்துக்கொண்டு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிழில் தப்பி ஓடியுள்ளார்கள்.

இதனை அவதானித்த முகமாலை பகுதி இளைஞர்கள் பொலிசார். மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன், திருடர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

பளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் துரிதமாக செயற்பட்டு ஆனையிறவு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் திருடர்களை பிடித்ததுடன், அவர்களிடமிருந்து நகையினையும் மீட்டுள்ளார்கள்.

இளைஞர்களால் துரத்திச் செல்லப்பட்டதால் A9 வீதியை விட்டு உள் வீதியால் அவர்களால் தப்பிக்க முடியாது போயுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,குற்ற செயலை தடுக்க உதவிய இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்