தலைவரின் மகள் துவாரகா என மாவீரர் தின கொள்கைப் பிரகடன உரை ஆற்றிய ஒரு வெங்காயம்!

தலைவரின் மகள் துவாரகா என மாவீரர் தின கொள்கைப் பிரகடன உரை ஆற்றிய ஒரு வெங்காயம்!

தலைவரின் மகள் துவாரகா என கூறி இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள சில வெங்காயங்களுடன் சேர்ந்து புலம்பெயர் தமிழர்களில் பணத்திற்காக ஆசைப்பட்ட சில வெங்காயங்களும் இணைந்து தலைவரின் மாவீரர்தின கொள்கை உரை போல் ஒன்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர்

இதே வேளை இவ்வாறான ஒரு தொழில்நுட்பத்தின் மூலமாகவே உண்மையான தலைவரைப் போல் ஒருவரை வீடியோவில் உருவாக்கி தமிழின உணர்வாளரும் ஈழ மக்களில் பற்று வைத்துள்ளவருமான பழநெடுமாறனையும் ஏமாற்றினார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என ஆணித்தரமாக ஊடகங்களில் தெரிவித்த விடயம் அவர் இவ்வாறான வீடியோ தொழில்நுட்பத்தால் ஏமாற்றபட்டே தெரிவித்திருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

AI தொழில்நுட்பத்தின் மூலம் முயற்சி

எவ்வாறாயினும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கிறார் என காண்பிப்பதற்கான காணொளியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

மாவீரர் தினத்தை முன்னிட்டு இந்த காணொளியை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக பிரபாகரனின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருப்பதாவும் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என போலியாக ஒருநபரை அடையாளம் காட்டி நிதி வசூல் நடைபெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.