தர்சாத்திற்கு ஏன் விக்கட் பொல்லால் அடித்தேன்! 25 வயது குண்டம்மாவின் பரபரப்பு வாக்குமூலம்!

தர்சாத்திற்கு ஏன் விக்கட் பொல்லால் அடித்தேன்! 25 வயது குண்டம்மாவின் பரபரப்பு வாக்குமூலம்!

மட்டக்களப்பில் கோவில் மணியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கல்முனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, சிறுவர் இல்லத்தின் மேற்பார்வையாளரான பெண்ணை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு கொக்குவில் எல்லை வீதியைச் சேர்ந்த 14 வயதுடைய நாராயண ஆனந்ததேவன் தர்சாத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி கொக்குவில் கொம்புமுறிச்ச சந்தி பிள்ளையார் ஆலயத்தில் 3 விளக்குகள், மணி , தீபச்சட்டி. வெண்கலத்திலான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனையும் பூசாரி ஒருவரையும் பிரதேச மக்கள் பிடித்து கொக்குவில் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இருவரையும் 17 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த சிறுவனை கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பூசாரியை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து குறித்த சிறுவனை கல்முனை சிறுவர் இல்ல வீதியில் உள்ள கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நவம்பர் 30 ஆம் திகதி குறித்த இல்லத்திலுள்ள கூண்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் சிறுவனின் சடலத்தில் அடிகாயங்கள் உள்ளதாகவும் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து குறித்த சிறுவர் பராமரிப்பு இல்ல பணிப்பாளரை நேற்று முன்தினம் (2) சனிக்கிழமை கைது செய்தனர்.

பராமரிப்பு நிலையத்தில் சிறுவன் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், மலம் கழித்து அதை தன் மீது எறிந்ததாகவும், அதனால் கோபமுற்று தாக்கியதாகவும் இல்ல பெண் மேற்பார்வையாளர் வாக்குமூலமளித்துள்ளார்.

சிறுவனை பொல்லால் தாக்கி அவரை கூண்டில் அடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மேற்பரார்வையாளரான பிரின்ஸ் பிலேந்திரன் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.