தாயுடன் கள்ளத்தொடர்பு! சுவிஸ் தமிழ் குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!!
வவுனியாவை சொந்த இடமாகக் கொண்ட 27 வயதான இளம் குடும்பப் பெண் சென்னையில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
சுவிஸ்லாந்திலிருந்து தனது உறவினரின் திருமணத்திற்காக சென்னைக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் வந்த குடும்பப் பெண்னே இவ்வாறு காப்பாற்றப்பட்டதாக தெரியவருகின்றது. குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் தனது தாயாருடன் தவறான உறவில் இருந்ததை கண்டு பிடித்த பின்னரே தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் பெண்ணின் உறவுகளுக்கு கூறியுள்ளார்கள்.
குறித்த பெண் தனது சகோதரிக்கு அனுப்பிய வட்சப் தகவலில் இருந்தும் தற்கொலைக்கு முயன்ற மேசையின் மேல் இருந்த கடிதத்திலிருந்தும் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பால் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பெண்ணின் தாயாரின் சகோதரி மகனின் திருமண வைபவத்திற்கு வவுனியாவிலிருந்து பெண்ணின் தாய் மற்றும் உறவினர்களும் சென்னையில் தங்கியிருந்துள்ளார்கள். குறித்த பெண் தனியே வீடு ஒன்று எடுத்து அதில் தனது 50 வயதான தாயாரையும் தங்க வைத்திருந்ததாக தெரியவருகின்றது.